பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வாரிசு. தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார்.
தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்துவரும் விஜய்யை, குடும்பப் பாங்கான ஒரு க்யூட் ரோலில் நடிக்க வைக்க ஆசைப்பட்டிருக்கும் இயக்குனர் வம்சி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஃபேமிலி ஆடியன்சையும் இப்படம் கவர்ந்திருக்க இதுவும் ஒரு காரணம்.
மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவரான சரத்குமாருக்கு மூன்று மகன்கள், கடைசி பிள்ளையான விஜய்க்கும் அவரது அப்பா சரத்குமாருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம், இதனால் வீட்டை விட்டு வெளியே வாழ்ந்துவரும் விஜய், உலகம் சுற்றும் வாலிபனாக தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தன் அப்பா சரத்குமாருக்கு தொழில் முறையில் ஏற்பட்ட பிரச்சினைகளை எப்படி சரிக்கட்டி குடும்பத்தையும் தொழிலையும் காப்பாற்றுகிறான் என்பதே படத்தின் கதை.
விஜய்க்கென்றே அளவெடுத்து செய்த கதாபாத்திரம், செம ஜாலி, குறும்பு, காதல், டான்ஸ் என கலகலப்பூட்டி இருக்கிறார் விஜய், விஜய்க்கு இணையான கதாபாத்திரம் என்றால் விஜய்யின் அம்மா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயசுதா பாத்திரம்தான், படத்தை தாங்கி நிற்பதும் நகர்த்திச்செல்வதும் இந்த இரண்டு கதாபாத்திரங்கள்தான். அப்பாவாக சரத்குமார், வில்லன் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், நகைச்சுவைக்கு யோகிபாபு என அனைவரும் தங்களுக்குறிய பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். டான்ஸ் காட்சிகளில் விஜய்க்கு இணையாக நடனமாடி ரசிகர்களை கிறங்க வைக்கிறார் ராஷ்மிகா.
தமனின் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம், கண்களை கவரும் ஒளிப்பதிவு படத்துக்கு சிறப்பாக இருக்கிறது. விவேக் அவர்களில் வசனங்கள் கூர்தீட்டிய வாள்போல் மனதில் இறக்குகிறது.
வாரிசு ஜாலி எண்டர்டெயின்மெண்ட்