Based on Varun Agarwal’s bestselling book ‘How I Braved Anu Aunty and Co-Founded a Million Dollar Company’ the movie is directed by debutant Abhishek Sinha and stars Ishwak Singh & Mahima Makwana!
National Award winning director Nitesh Tiwari, the creativegenius behind some of India’s exemplary films like Dangal, Chhichhore, ChillarParty and many more along with Ashwiny Iyer Tiwari have joined hands with Star Studios, Ronnie Screwvala and Siddharth Roy Kapur to produce a young-adultcomedy drama titled ‘Bas Karo Aunty!’, adapted from Varun Agarwal’s bestseller ‘How I Braved Anu Aunty and Co-Founded a Million Dollar Company.’
The movie is about a real-life experience of millennialsand today’s youth and their dilemma, the thrills, risks, and romance ofembarking on a new life path and chasing one’s dreams; it tells a hilarious and inspiring story through witty millennial banter and capturing the zeitgeist andentrepreneurial spirit of young India. The powerhouse makers have reunited after the monumental success of Dangal for Bas Karo Aunty! which stars Ishwak Singh (Rocket Boys,Paatal Lok) and Mahima Makwana (Antim) in the lead. Helmed by debutant filmmaker Abhishek Sinha and written by Nitesh Tiwari and Nikhil Mehrotra, thefilm will wholeheartedly speak the language of Indian millennials and Gen Z!Filled with fun, emotional and inspiring coming of age moments, Bas Karo Aunty’s shoot has started recently and will be shot across Mumbai.
Creative powerhouse duo Nitesh Tiwari and AshwinyIyer Tiwari say, “We found Varun Agarwal’s journey quite captivating, and I’m thrilled about mounting this film on the story of abudding entrepreneur. Our film captures the mood and zeitgeist of the nation:India is young, jubilant, and enterprising, and “Bas Karo, Aunty!” isthe perfect response to anyone trying to impede this spirit of enterprise!”
“With Star Studios, we aim to collaborate with the best creativeminds and present unique stories that will resonate with wider audiences. Bas karo Aunty! is a joyous story with a young fresh appeal, and we are happy toassociate once again with leading content forces – Nitesh Tiwari, Ronnie Screwvala, Siddharth Roy Kapur and Ashwiny IyerTiwari to present this fun entertainer!” said Bikram Duggal, Head of Studios,Disney Star.
Siddharth Roy Kapur of Roy Kapur Films says, “Bas Karo Aunty! is a film that has thepotential to resonate across the young generation that has embraced the hustle culture worldwide. While most people of this generation are navigating their careers and figuring out their skill set, they’re pitted against powerful odds.The meddlesome Anu Aunty is a personification of those obstacles. This is astory of joy and triumph, and I’m happy to have aligned forces with Bikram,Nitesh, Ronnie and Abhishek to tell this story.” “I’m happy to reunite with Star Studios,Siddharth and Nitesh for Bas Karo Aunty! premised on a funny and inspiring story that is sure to hit it off with people who have an entrepreneurial streak,” said Ronnie Screwvala – RSVP.
Director Abhishek Sinha says, “Director Abhishek Sinha says, “Nothing beats the thrill of bringing a relatable story to the audience for a filmmaker. I’m excited to be directing a film written by my mentor and one of the closest friends Nitesh Tiwari in collaboration with Nikhil Mehrotra along with stalwart producers like Star Studios, RSVP, Sid Roy Kapur films, and Earthsky productions helmed by Ashwiny Iyer Tiwari and Nitesh Tiwari. As a team they gauged the merit of this hilarious, heart warming and inspiring story. This film is our cinematic salute to everyone brave enough to go after their dreams.”
Produced by Star Studios, RSVP, Roy Kapur Films and Earthsky Pictures, directedby Abhishek Sinha, and starring Ishwak Singh and Mahima Makwana, Bas KaroAunty! is set in and shot all over Mumbai.
STAR STUDIOS, RSVP Movies மற்றும் ROY KAPUR FILMS தயாரிப்பில், புதுமை படைப்புகளை வழங்கும் கூட்டணியான நிதீஷ் திவாரி மற்றும் அஷ்வினி திவாரி இளம் அடல்ட் காமெடி ஜானரில் ‘பஸ் கரோ ஆன்ட்டி *BAS KARO AUNTY * திரைப்படத்தை அறிவித்துள்ளனர் !
வருண் அகர்வாலின் எழுத்தில் அதிகம் விற்பனையான புத்தகமான ‘How I Braved Anu Aunty and Co-Founded a Million Dollar Company’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, அறிமுக இயக்குனர் அபிஷேக் சின்ஹா இயக்கும் இந்த திரைப்படத்தில் இஷ்வாக் சிங் & மஹிமா மக்வானா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தியா சினிமாவின் முன்மாதிரியான திரைப்படங்களான “தங்கல், சிச்சோரே, சில்லர் பார்ட்டி” போன்ற திரைப்படங்களை படைத்த மேதை தேசிய விருது பெற்ற இயக்குனர் நித்தேஷ் திவாரி, மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி, STAR STUDIOS, ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் சித்தார்த் ராய் கபூர் ஆகியோருடன் இணைந்து அடலட் காமெடி திரைப்படத்தை உருவாக்குகின்றனர். ‘பஸ் கரோ ஆன்ட்டி’, வருண் அகர்வாலின் எழுத்தில் விற்பனையில் அசத்தும் ‘How I Braved Anu Aunty and Co-Founded a Million Dollar Company’ என்ற நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படம் இன்றைய இளைஞர்களின் நிஜ வாழ்க்கை அனுபவத்தைப் பற்றியது மற்றும் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையில் இறங்கி முயற்சிப்பது மற்றும் ஒருவரின் கனவுகளைத் துரத்துவது எனும் வாழ்க்கை முறையில், அவர்கள் சந்திக்கும் ஆபத்துகள் மற்றும் காதல்,அவர்களின் இக்கட்டான நிலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. இளம் இந்தியாவின் ஆர்வத்தையும் தொழில்முனைவோரின் உணர்வையும், நகைச்சுவை நிறைந்த, ஊக்கமளிக்கும் கதையாக இப்படம் சொல்கிறது.
பஸ் கரோ ஆண்டி திரைப்படத்திற்காக தங்கல் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அதன் வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் இஷ்வாக் சிங் (Rocket Boys, Paatal Lok) மற்றும் மஹிமா மக்வானா (Antim) ஆகியோர் கதை மாந்தர்களாக நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் அபிஷேக் சின்ஹா இயக்க, நிதேஷ் திவாரி மற்றும் நிகில் மெஹ்ரோத்ரா திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படம், இன்றைய இளைய சமுதாயத்தின் வாழ்க்கைமுறை மற்றும் Gen Z உடைய வாழ்கைமுறையை முழு மனதுடன் பேசுவதாக அமைந்துள்ளது. உணர்வுபூர்வமான கதை மற்றும் ஊக்கமளிக்கும் தருணங்களுடன் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக இப்படம் இருக்கும். பஸ் கரோ ஆன்ட்டி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு, மும்பை முழுவதும் படமாக்கப்பட்டுவருகிறது.
புதுமையான் கதைகளை அழுத்தமான படைப்பாளிகளான நித்தேஷ் திவாரி மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி கூறும்போது,
”வருண் அகர்வாலின் பயணம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது, மேலும் இந்த திரைப்படம் வளர்ந்து வரும் தொழில்முனைவோரின் கதையை மையமாகக் கொண்டதாக இருப்பது மிகவும் பிடித்திருந்தது. எங்கள் திரைப்படம் தேசத்தின் மனநிலையையும் இளைய சமுதாயத்தின் ஆர்வத்தையும் படம்பிடித்து காட்டும். ஒரு நிறுவனம் உருவாக்கும் எண்ணத்தை தடுக்க முயற்சிக்கும் எல்லோருக்கும் “பஸ் கரோ, ஆன்ட்டி!” ஒரு சரியான பதிலாக இருக்கும்!”
Studios, Disney Star தலைவர் பிக்ரம் துகல் கூறியதாவது….
“ஸ்டார் ஸ்டுடியோஸ் உடைய ஒத்துழைப்புடன், சிறந்த படைப்பாற்றல் உள்ளவர்களுடன் இணைந்து, பரந்த பார்வையாளர்களை இணைக்கும் விதமான தனித்துவமான கதைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். பஸ் கரோ ஆன்ட்டி இளம் உள்ளங்களை கவரும் மகிழ்ச்சியான கதை, மேலும் இந்த வேடிக்கையான பொழுதுபோக்கை வழங்குவதற்காக முன்னணி திறமையாளர்களான நிதேஷ் திவாரி, ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர் மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி ஆகியோருடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!” என்றார்.
ROY KAPUR FILMS சித்தார்த் ராய் கபூர் கூறுகையில்,
“உலகளவில் இருக்கும் இளம் தலைமுறையினரின் ஒரு பகுதியினரை பிரதிபலிக்கும் திறன் கொண்ட திரைப்படம் பஸ் கரோ ஆன்ட்டி. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையைத் தேடி, அவர்களின் திறமையைக் கண்டறிய போராடுகின்றனர். , அவர்கள் சக்தி வாய்ந்த முரண்பாடுகளுக்கு எதிராக தங்கள் வாழ்க்கைக்காக போராடுகின்றனர். தேவையில்லாமல் மற்றவர்கள் வாழ்கையில் குறுக்கிடக்கூடிய அனு ஆன்ட்டி அந்தத் தடைகளின் ஒரு உதாரணம். இது மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் வரலாறு, மேலும் இந்தக் கதையைச் சொல்ல பிக்ரம், நிதேஷ், ரோனி மற்றும் அபிஷேக் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ” என்றார்
RSVP ரோனி ஸ்க்ரூவாலா கூறுகையில்..
“STAR STUDIOS, சித்தார்த் மற்றும் நித்தேஷ் ஆகியோருடன் பஸ் கரோ ஆன்ட்டி படத்திற்காக மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ஒரு வேடிக்கையான மற்றும் எழுச்சியூட்டும் கதை தான் இது, இது தொழில்முனைவோர் ஆகும் ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில் இந்த படம் நிச்சயமாக பெரும் வெற்றிபெறும்”
இயக்குனர் அபிஷேக் சின்ஹா கூறும்போது,
“ஒரு இயக்குநருக்கு எல்லோரும் விரும்புக்கூடிய ஒரு கதையை பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் உள்ள சுவாரஸ்யத்தை விட வேறு எதுவும் வேறு எதுவும் சுவாரஷ்யமாக இருக்காது. நிகில் மெஹ்ரோத்ரா, STAR STUDIOS, RSVP Movies மற்றும் ROY KAPUR FILMS மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி மற்றும்நிதேஷ் திவாரியின் Earthsky Pictures போன்ற பிரமாண்ட தயாரிப்பாளர்களுடன் இணைந்து, எனது வழிகாட்டியும் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான நித்தேஷ் திவாரி எழுதிய திரைப்படத்தை இயக்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு குழுவாக அவர்கள் இந்த இதயத்தை தொடும் மற்றும் ஊக்கமளிக்கும் கதையினை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தத் திரைப்படம் கனவுகளைப் பின்தொடரும் தைரியமான அனைவருக்குமான எங்களுடைய மரியாதை ஆகும்.” என்றார்.
STAR STUDIOS, RSVP Movies மற்றும் ROY KAPUR FILMS மற்றும் Earthsky Pictures தயாரிப்பில், அபிஷேக் சின்ஹா இந்த படத்தை இயக்குகிறார், இஷ்வாக் சிங் மற்றும் மஹிமா மக்வானா நடிக்கும், பாஸ் கரோஆன்ட்டி திரைப்படம் மும்பை முழுவதும் படமாக்கப்படவுள்ளது.