உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேத்பதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மாலை 6 மணிக்கு தொடங்கியது. நிகச்சி தொடங்குவதற்கு மூன்று நான்கு மணி நேரத்துக்கு முன்பிருந்தே விழா நடைபெறவிருந்த நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்தனர். விழா சரியாக 6 மணிக்கு தொடங்கிய போது இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்த்துச்செய்தி திரையிடப்பட்டது.
அதன் பிறகு பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், சைந்தவி, ஸ்வேதா மேனன் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற மினி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொகுப்பாளர் டிடி தன்னுடைய பாணியில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நட்சத்திரங்களை அரங்குக்கு வரவேற்றார். காளிதாஸ் ஜெயராம், உதயநிதி, அனிருத், விஜய் சேதுபதி, சிம்பு, லோகேஷ் கனகராஜ் என ஒவ்வொருவராக அரங்குக்கு வந்த பிறகுக் விக்ரம் நாயகன் கமல், அரங்கு அதிரும் கரகோஷங்களுடன் அரங்குக்கு வந்தார்.
நடன இயக்குனர் சாண்டி குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை மட்டுமல்லாமல் கமல்ஹாசனையும் கவந்தது என்பது உலகநாயகனின் முகமலர்ச்சியில் நன்கு தெரிந்தது.
பிரபலங்கள் ஒவ்வொருவராக மேடையில் தோன்றி விக்ரம் படம் குறித்து தங்கள் கருத்துக்களை கூறினர். அதன் பிறகு சரியாக 8 மணிக்கு விக்ரம் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. ரசிகர்கள் உண்மையில் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகின என்பது உண்மை ஏனென்றால் ட்ரெய்லர் அவ்வளவு அதிரடியாக இருந்தது.
அதன் பிறகு சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் மேடையில் தோன்றி பேசிய பிறகு, அனிருத் விக்ரம் டைட்டில் பாடலை மேடையில் பாடினார். அனிருத்துடன் இணைந்து ரசிகர்கள் அனைவரும் “விக்ரம் விக்ரம்” குரல் கொடுத்தது அரங்கை அதிர வைக்கும்படியாக இருந்தது. பின்பு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய உதவி இயக்குனர்கள் அனைவரையும் மேடைக்கு வரவழைத்து அறிமுகப்படுத்தினார். அதையடுத்து நாயகன் கமல் மேடையில் தோன்றி விக்ரம் குழுவினருக்கு நன்றியை தெரிவித்த பிறகு விழாவுக்கு வந்திருந்த அனைத்து திரைப்பிரலபலங்களும் சேர்ந்து விக்ரம் படத்தின் இசையை வெளியிட்டனர்.
விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரையிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் விதமாக இருந்தது. கலந்து கொண்ட ரசிகர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்நாளில் இது ஒரு மிகச்சிறந்த கொண்டாட்ட தருணமாக இருந்தது என்பது உண்மை. பல ஆண்டுகளுக்கு இந்த விழாவை தங்கள் வாழ்நாளில் நினைவுகூர்வார்கள் என்பது உலகநாயகனுக்கு கிடைத்த உண்மையான அன்பும் வெற்றியும்