ஹரி – ஹரீஸ் இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் ஸ்ரீதேவி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சமந்தா, உன்னி முகுந்தன், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் யசோதா.
மணிசர்மா இசையமைக்க, எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்தியாவின் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாகி இருக்கும் வாடகைத்தாய் விவகாரம்தான் படத்தின் கரு. வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த சமந்தா வாடகைத்தாயாக ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.
குழந்தை பிறக்கும்வரை அனைந்து வசதிகளும் கூடிய ஹைடெக்கான இடத்தில் தங்கவைக்கப்படுகிறார். அவரைப்போலவே பல பெண்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், திடீரென சில பெண்கள் காணாமல் போக
உஷாராகும் சமந்தா, அங்கு நடக்கும் மர்மமான விசயங்களை சந்தேகித்து பின் தொடர்கிறார். அந்த மர்மங்கள் என்ன? சமந்தா அதை கண்டுபிடித்தாரா? அந்த இடத்தில் இருந்து தப்பினாரா என்பதே யசோதா படத்தின் கதை
ஒட்டு மொத்த படத்தையும் தனி ஒரு ஆளாக தாங்கிப்பிடித்து நடித்து அசத்தி இருக்கிறார் சமந்தா. ஏழைப்பெண்ணாக அந்த இடத்துக்கு மருண்ட விழிகளோடுவரும் யசோதாகவும் சரி, உண்மையை உணர்ந்து அதிரடி ஆக்சன் காட்டும்
யசோதாகவும் சரி தன்னுடைய மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கர்பிணியாக இருக்கும் சமந்தா செய்யும் சண்டைக்காட்சிகள் லாஜிக் மீறாத வகையில் , எப்படி இப்படி என்றெல்லாம் கேள்வி எழும்பாத வகையில்
சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வில்லத்தனம் கலந்த ரோலில் நன்றாக நடித்திருக்கிரார் வரலட்சுமி. உன்னி முகுந்தனின் கேரக்டரும் வெயிட் அவருடைய நடிப்பும் வெயிட். மிரட்டி இருக்கிறார்.
ஒரு புறம் நடிகைகள், அழகிப்போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களின் கொலை, அதை காவல்துறை விசாரிப்பது, மற்றொரு புறம் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வந்திருக்கும் பெண்கள் தங்கி இருக்கும் இடத்தில் நடக்கும்
சம்பவங்கள் என இரண்டு ட்ராக்களில் கதை நகர்ந்து, ஒற்றை புள்ளியில் இணையும் இடம் அருமை. ஹரி – ஹரீஸ் ஜோடி நல்லதொரு திரைக்கதையை அமைத்துள்ளனர். மணி சர்மாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு
மிகப்பெரிய பலம்.
அழகுசாதன பொருட்களின் வர்த்தகத்துக்குப் பின்னால் இருக்கும் இண்டர்நேஷ்னல் சதிகளை இப்பட்த்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர் இயக்குனர்கள் ஹரி – ஹரீஸ்.
யசோதா – சமூக அக்கறை