அசோக் செல்வன், ரீத்து வர்மா, அபர்ணா முரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நடிப்பில், ரா கார்திக் இயக்கத்தில், கோபி சுந்தர் இசையில் வியாகம் 18 ஸ்டுடியோஸ், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘நித்தம் ஒரு வானம்’
மிஸ்டர் ஃபர்ஃபெக்சனிஸ்ட் அசோக் செல்வன், ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். எல்லாம் சரியாக இருக்க வேண்டும், எதிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். இதனால் இவருக்கு பல்வேறு உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்காக மனநல மருத்துவர் அபிராமியை சந்திக்கிறார். அவர் சில கதைகளை படிக்கசொல்லி அசோக் செல்வனிடம் கொடுக்க, அக்கதைகள் முடிவுல்லாமல் இருக்கின்றன. பிறகே அது கதைகள் அல்ல உண்மை என்று சொல்கிறார் அபிராமி. வித்தியாசமான கதைக்களத்தில் ஒவ்வொரு நிமிடமும் பார்க்கும் வானம் மாறிக்கொண்டே இருப்பதை சொல்லும் கதைதான் நித்தம் ஒரு வானம் படத்தின் கதை.
வெவ்வேறு களம், வெவ்வேறு காலகட்டம், வெவ்வேறு மனிதர்கள் என ஒவ்வொரு கதையிலும் தான் ஒரு கதை மாந்தராக வாழ்ந்திருக்கிறார் அசோக் செல்வன். இக்கதையை தேர்ந்தெடுத்தற்காகவும், மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகவும் அவருக்கு ஒரு சிறப்பு பாராட்டுக்கள்.
கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தில், மதி என்ற கதா பாத்திரத்தில் நடித்திருக்கும் அபர்ணா முரளி மற்றும் அவர் பாத்திரம், கல்லூரி காதலியாக வரும் ஷிவாத்மிகா பாத்திரம், அசோக் செல்வனுடன் இணைந்து பயணிக்கும் ரீத்து வர்மா என படத்தில் வரும் பாத்திரங்கள் பாத்திரத்தில் நடித்த நடிகர் நடிகைகள் என அனைவரையும் மனதில் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர்.
பயண கதைக்காக ஃபர்ஃபெக்ட் ஒளிப்பதிவு, படத்தொகுப்புமற்றும் இசை என அனைத்து டெக்னிக்கல் விசயங்களும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. நீண்ட நாட்களுக்குப்பிறகு உண்மையான ஃபீல்குட் மூவியாக வெளியாகி இருக்கிறது நித்தம் ஒரு வானம்
நித்தம் ஒரு வானம்: ஆழ் மனதில் அமைதி