Friday, November 15, 2024
Home Uncategorized ஆற்றல் திரைவிமர்சனம்.!

ஆற்றல் திரைவிமர்சனம்.!

விதார்த்தின் ஆற்றல் படம் எப்படி இருக்கு? ஆற்றல் திரைவிமர்சனம்.!!

விதார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஆற்றல் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விதார்த், ஷிரிதா ராவ், வம்சி கிருஷ்ணா, வித்யூ ராமன், என பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆற்றல்‌‌. படத்தை கே எல் கண்ணன் இயக்க செவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக ஜே மைக்கேல் தயாரித்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன விதார்த் ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வர அவருக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இப்படியான நிலையில் வித்தாரத்தின் அப்பா சார்லி 10 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து எடுத்து வரும்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொன்று பணத்தை திருடி விடுகின்றனர்.

பிறகு வித்தார்த்துக்கு அப்பாவின் மரணம் குறித்து உண்மை எப்படி தெரிய வருகிறது? அப்பாவின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா இல்லையா? கடைசியில் அவரது ஆட்டோமேட்டிக் கார் உருவாக்கும் கனவு நனவானதா? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

வழக்கம்போல விதார்த் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். சார்லி அப்பாவாக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்.

நாயகியாக நடித்துள்ள ஷிரிதா ராவ் அழகான நடிப்பை கொடுக்க விக்னேஷ், வம்சி கிருஷ்ணா என படத்தில் நடித்துள்ளவர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

அஸ்வின் ஹேமந்த் இசையும் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

கே எல் கண்ணன் வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதை சிறப்பான முறையில் இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் ஆற்றல் விதார்த் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments