Saturday, April 19, 2025
Home Uncategorized அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் "பூங்கா"

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”

‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் K.P.தனசேகர்.

ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை.

கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் K.P.தனசேகர். ஒளிப்பதிவு R.H.அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி S.R.ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், PRO கோவிந்தராஜ். தயாரிப்பு K.P.தனசேகர், பூங்கா R.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, ரவி மரியா ஆகியோர்கள் நடிப்பில் ‘குருமூர்த்தி’ என்ற படத்தை இயக்கிய கே.பி.தனசேகர் இயக்கும் இரண்டாவது படம் “பூங்கா”. வருமான வரி கட்டாத பணம், நமக்கு சொந்தமில்லை என்பதை வைத்து, முதல்படம் விறுவிறுப்பாக இயக்கி, பேசப்பட்டது. நல்ல கருத்துக்களுடன் இரண்டாவது படம் வருகிறது.

மண் மீது சொர்க்கமாக உருவாகி வருகிறது “பூங்கா”!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments