Sunday, November 24, 2024
Home Uncategorized கோவாவில் நடைபெறும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்குஇ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு

கோவாவில் நடைபெறும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்குஇ.வி.கணேஷ்பாபுவின் ஆசான் குறும்படம் தேர்வு

International Film Festival of India

selection of Non-Feature Film “Aasaan (Tamil)” under the Special Presentations at the 55th International Film Festival of India being held in Goa from 20″-28″ November 2024

திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான
இ.வி.கணேஷ்பாபு, சினிமா மட்டுமல்லாது விளம்பரப்படங்கள், ஆவணப்படங்கள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.

ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் G.வனிதா தயாரித்து,
இ.வி.கணேஷ்பாபு எழுதி,இயக்கி, நடித்திருக்கும் ஆசான் குறும்படம் கோவாவில் நடைபெற இருக்கும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இ.வி.கணேஷ்பாபுவின் இயக்கத்தில் தேசியவிருது பெற்ற ஸ்ரீகாந்த்தேவா இந்தப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.கே.ராஜராஜனின் ஒளிப்பதிவில்,
சுராஜ்கவி
படத்தொகுப்பில்,
UKI.ஐயப்பன்
ஒலிக்கலவையில், நந்தினிகார்க்கியின் சப்டைட்டிலிங் பணியில் இப்படம் உருவாகி இருக்கிறது.
இ.வி.கணேஷ்பாபு நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில்
ராமன்அப்துல்லா, தஞ்சை அமலன், ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்

இப்படத்தைப் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.
உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட ஆளுமைகள் இந்த விழாவுக்கு வருகை தருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் எனது படமும், பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வரும் 23.11.24 அன்று பகல் 12.15 க்கு கோவா panjim ல் Inox திரையரங்கில் ஆசான் திரையிடப்படுகிறது

சிறுவயதில் மாணவர்கள் செய்யும் குற்றத்திற்கு அவர்களை தண்டிப்பதை விட, அந்தத்தவறை உணரச் செய்வதின் மூலம் அவர்கள் வாழ்வை, ஒரு ஆசிரியரால் உயர்த்த முடியும் என்ற
கதைக்கருவை மையமாகக் கொண்டு ஆசான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

IFFIWithDD #IFFI2024 #IFFIGoa @IFFIGoa @nfdcindia

1FF155

55IFFI #Aasaan #FilmFestival

@ganeshbabu_ev
@teamaimpr

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments