The movie, which is a comedy drama is all set for the worldwide theatrical release on June 8, 2022.
During this juncture, the cast and crew members of this movie interacted with press and media.
Music Director K said, “Pannikutty is an important movie in my career. While I was consistently working in movie with serious story premises, this one became very close to my heart. There are five songs in the album. I can assure you all that that movie will impress you all, and, henceforth request you to support it.”
Debut Actress Lakshmi Priya said, “The movie has a lot of promising actors, and working with them has given me an immense experience. Cinematographer has worked a lot to depict my character beautifully on the screens. Both music director and lyricists together have given beautiful songs. This movie is an honest attempt by the entire team. Our movie is now ready for release, and I request press and media fraternity to help it find a good reach among the audiences.”
Producer Sameer Bharath said, “I thank Lyca Productions for paving way for this movie to have a good theatrical release. A movie without bigger star-cast can impress and engross the audiences only if it has got a good screenplay. I am glad that Pannikutty has shaped up well in this aspect. Anu Charan isn’t just a good filmmaker, but a talented editor as well. Karunakaran is a versatile actor, and the roles he has essayed so far have been appreciable. This movie will be a great milestone in his career. I request press and media to support low budget movies like Pannikutty.”
Dindugal I Leoni said, “I am making my onscreen comeback after 21 years with this movie. I thank director for choosing me to be a part of this movie. I have essayed the character of a Godman in this movie. I can understand that director has given this character for me with a reason. Director Anu Charan always remains cool irrespective of whatever the situation is. He is an expert when it comes to extracting the best performances from the actors. This movie is going to be a special movie for actor Karunakaran. This movie has given confidence to everyone in the team. I wish the entire crew for the grand success of this movie.”
Director Anu Charan said, “I thank both Lyca Productions and Super Talkies Sameer for giving me an opportunity to helm this project. Anucharan said “I believe a good comedy can uplift a depressed or hurt person. I wanted my film to do that and made Pannikutty.
It worked very well with the story penned by Ravi Murugaiah. Producer also liked this movie, when I narrated it. It’s a great elation for me to have Leoni sir onboard for this project. Every actor had completed shooting for this movie amidst so many challenges, but offered their complete dedication towards this project. Both music director and lyricist started journeying with me right from the beginning of this movie. It was a tough task to shoot the movie with the real piglets. We had to use lots of techniques to get the scenes shot. I take this opportunity to thank the villagers around Usilampatti for their support during the film’s shooting. I can assure you all that you will walk out of theaters with smiling faces after watching this movie. Life is all about hope, and this message has been conveyed through an entertaining manner in this movie.
Actor Karunakaran said, “Whenever I am offered to play a substantial role, I think twice and self-analyze if I am worthy for those roles. When directed narrated the script of Pannikutty, I was so much impressed and fell in love with it. Every character has so much of importance in this movie. The cool and composed nature of director surprised me a lot. Music director’s songs are going to endow a sweet experience for the audiences. This movie instils lots of confidence and hope. All of us are elated on Yogi Babu playing the lead, and delivering a commendable performance. I request press and media friends to facilitate a better reach for this movie among the audiences.”
Pannikutty is directed by Anucharan and is produced by Super Talkies Sameer Bharath Ram. Lyca Productions has acquired the rights of this movie, Apart from Yogi Babu, the others in the star cast includes Karunakaran, Dindugal I Leoni, Singam Puli, Vijay TV fame Ramar, Thanga Durai, and few more prominent comedy actors. K has composed music and Sathish Murugan has handled cinematography. Ravi Murugaiah has written the story, and has penned screenplay along with director Anu Charan. Fire Karthik (Stunts), M.R. Radhakrishnan (Audiography), Murugan (Stills), M. Sivakumar (Production Manager), Sameer Bharath Ram (Producer) are the other technicians.
“பன்னிக்குட்டி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”. ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜீன் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்
இசையமைப்பாளர் K கூறியதாவது…
“பன்னிக்குட்டி” எனக்கு முக்கியமான படம், தொடர்ந்து சீரியஸான படங்களை செய்துகொண்டிருக்கும் வேளையில் இந்த படம் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்த படமாக இருக்கும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை.
அறிமுக நாயகி லக்ஷ்மி பிரியா கூறியதாவது…
இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுடன் பணிபுரிந்தது பெரிய அனுபவம். படத்தின் என்னுடைய கதாபாத்திரம் அழகாக திரையில் கொண்டுவர ஒளிப்பதிவாளர் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார்கள். இது ஒரு நேர்மையான படம். எங்கள் படம் முழுமையாக தயாராகிவிட்டது, அதை பார்வையாளர்களிடம் நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும்.
தயாரிப்பாளர் ஷமீர் கூறியதாவது…
படத்தை தியேட்டருக்கு கொண்டு வர உதவிய லைகா புரடக்சனுக்கு நன்றி. சிறிய படங்களுக்கு, திரைக்கதை நன்றாக இருந்தால் தான், பெரிய நடிகர்கள் இல்லாமலும் அதை சிறப்பாக எடுக்க முடியும். அனுசரண் இயக்குநர் மட்டும் அல்ல, சிறந்த படதொகுப்பாளரும் கூட. கருணாகரன் சிறந்த நடிகர், அவர் ஏற்கும் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். சின்ன படங்களுக்கு நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும்.
திண்டுக்கல் ஐ லியோனி கூறியதாவது…
இந்த படத்தின் மூலமாக 21 வருடத்திற்கு பிறகு நடிப்பிற்கு திரும்ப வருகிறேன். இந்த படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. நான் இந்த படத்தில் சாமியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை இயக்குனர் காரணமாக தான் என்னிடம் கொடுத்திருக்கிறார். எந்தவித பதட்டமும் இல்லாமல் இயக்குனர் அனுசரண் வேலைப்பார்ப்பார். கருணாகரனுக்கு இந்தபடம் பெரிய வெற்றியாக இருக்கும். அனுசரண் நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவதில் திறமைக்காரர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படம் அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்கும் படமாக இருக்கும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் நன்றி.
இயக்குனர் அனுசரண் கூறியதாவது…
எனக்கு வாய்ப்புகொடுத்த லைகாவிற்கும், ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும் போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். ரவி முருகையா உடைய கதை தான் இந்த பன்னிகுட்டி. இந்த கதையை தயாரிப்பாளரிடம் கூறும் போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள், ஆனால் முழு அர்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்த கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நிஜ பன்னிகுட்டியுடன் படப்பிடிப்பை நடத்தினோம். அது மிகவும் கடினமாக இருந்தது. விலங்குகளை வைத்து எடுப்பது சாதாரண காரியம் இல்லை, பல நெருக்கடிகளை கடந்து, சில யுக்திகளை பயன்படுத்தி தான் படம் எடுத்தோம். உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும், அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கை தான் வாழ்கை என்பதை இந்த படம் கற்றுக்கொடுக்கும்.
நடிகர் கருணாகரன் கூறியதாவது…
ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு கிடைக்கும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவனா என்று யோசிப்பேன். இந்த கதையை இயக்குனர் கூறிய போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரங்கள் தான். இயக்குனர் உடைய பதட்டமில்லாத தன்மை, என்னை ஆச்சர்யபடவைத்தது. இசையமைப்பாளர் இந்த படத்தில் கொடுத்திருக்கும் இசை, ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். இந்த படம் நம்பிக்கை கொடுக்கும் படம். இந்த படத்தில் யோகிபாபு நடித்திருப்பது எங்களுக்கு சந்தோசம். படத்தை மக்களிடம் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
“பன்னிக்குட்டி” திரைப்படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். Lyca Productions வழங்க Super Talkies சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார். இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.