Vanakkam.
My humble greetings to all the leaders of INDIA alliance that is formed to safeguard our Union of India. We were 19 parties when we met in Patna, it increased to 26 in Bengaluru. Today, in Mumbai, it rose to 28. All of the journalists are aware that the INDIA alliance is going from strength to strength, as each day passes.
Our Prime Minister has become the Public Relations Officer of INDIA alliance by talking ill about us wherever he goes instead of his government’s achievements. I thank our PM Narendra Modi for making INDIA alliance popular.
The Union BJP Government is devoid of any achievements to show despite ruling the country for over nine years. Prime Minister Narendra Modi is silent over the 7.5 lakh crore irregularities flagged by the CAG report. The Modi Government is becoming unpopular day by day and the INDIA alliance becoming popular. Ours is not an alliance merely to win an election. It is an alliance to save the country and the future of its 1.4 billion citizens.
This is not a self-serving alliance. This is an alliance formed to fulfil the aspirations of our people. People of India have longed for the Opposition unity. We are gathered here to honour and fulfil their expectations.
People of Maharashtra have offered their best wishes and support to our alliance. Today’s meeting was not only satisfactory but also turned out to be a turning-point. The support and expectations as well are growing day by day.
Lies and falsehood are the capital of the fascist BJP regime. The count down for their end has begun. The nine-year BJP rule has shown scant regard to democratic ethos of India. Now, it has become a threat to democracy and its very existence. The Modi govt will go down in history for destroying democratic institutions and traditions by toppling elected governments of the Opposition. Maharashtra is the testament to BJP’s undermining of democracy.
Dividing opposition and toppling their governments by splurging ill gotten money and unleashing agencies have become the full-time job of the BJP.
The very notion that there should be no political opponents is fascism. India is witnessing a political dictatorship.
Modi’s government has least respect for either the Parliament or the Courts. The Election Commission has become a puppet of this regime. The BJP has robbed the independence of all premier agencies like the E.D., C.B.I., and I.T. and converted them into its hit squad and these lapdog agencies are intimidating the opposition at the whims and fancies of their political masters (BJP).
Our intention is not to unseat an individual named Narendra Modi. We have no hatred or grudge against any individual. If BJP comes to power again, the India we all had seen will cease to exist anymore. That is why we oppose them.
Even though we belong to different parties, we have come together to save mother India. That is our foremost objective. We have not aligned for political gains. We have teamed up to protect India’s sovereignty, dignity, secularism, social justice, federalism and fraternity. We will succeed in our objective with the support of the people. BJP is not an invincible party. They have been made to bite the dust in many states including Karnataka and Himachal Pradesh.
Despite the BJP government having a brute majority, the poor and the needy did not get any benefit. The standard of living has not improved. The future of Indian citizens is in peril in the face of increasing hate atmosphere. India’s stature has declined all over the world because of the hate, communal violence and crony capitalism virulently spread by BJP regime.
This is the time to end the BJP’s attempts to impose uniformity in everything such as One Nation – One Tax, One Nation – One Language, One Nation – One Culture, One Nation – One Food, One Nation – One Education policy, One Nation – One Election, One Nation – One Party.
The opposition parties from Kanyakumari to Kashmir have entered the political battlefront to save India. I appeal to each and every patriotic citizen of India to join this battle to protect mother India and I seek the support of media also in this endeavour. Thank you.
இன்று (01-09-2023) மும்பையில் நடைபெற்ற “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த அறிக்கையின் விவரம் வருமாறு:
அனைவர்க்கும் வணக்கம்.
இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களுக்கும் வணக்கம். பாட்னாவில் கூடும் போது 19 கட்சிகள் – பெங்களூரில் கூடும் போது 26 கட்சிகள் – மும்பையில் கூடிய இன்று 28 கட்சிகள் – என இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை அடைந்து வருவதை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.
எங்கே சென்றாலும் – எங்கே பேசினாலும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல் – எங்களைப் பற்றியே பேசி எங்கள் கூட்டணிக்கு சிறந்த ‘பப்ளிக் ரிலேஷன் ஆபீஸராக’ ‘பிரைம் மினிஸ்டர்’ அவர்களே செயல்பட்டு வருகிறார். இந்தியா கூட்டணியை பாப்புலர் ஆக்கியதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
9 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சொல்வதற்கு சாதனைகளே இல்லாத ஆட்சி ஒன்றிய பா.ஜ.க ஆட்சிதான். சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றிப் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதி காக்கிறார். மோடி ஆட்சி நாளுக்குநாள் ‘unpopular’ ஆகி வருகிறது. இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் ‘popular’ ஆகி வருகிறது. இது ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணி மட்டும் அல்ல. இந்திய நாட்டையும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி…
இது கட்சிகள் தங்கள் தேவைக்காக உருவாக்கிய கூட்டணி அல்ல; மாறாக, மக்கள் விருப்பத்தால் உருவாகி இருக்கிற மகத்தான அணி. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட மாட்டார்களா என ஏங்கிய இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக உருவாகி இருக்கிற அணி.
மராட்டிய மக்கள் இந்த அணிக்கு இன்று பரிபூரணமான ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். இன்றைய கூட்டம், திருப்திகரமாக மட்டுமல்ல, திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவும், எங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாட்டு மக்களிடையே நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பா.ஜ.க நடத்திவரும் பாசிச ஆட்சியின் ‘கவுண்டவுன்’ ஆரம்பமாகி உள்ளது. ஒன்பது ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் ஜனநாயகத்துக்குத் துளியும் மதிப்பில்லை. தற்போது அது இந்தியாவின் ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்களாட்சியில் தன்னாட்சி அமைப்புகளையும், மரபுகளையும் சிதைத்த அரசாக; தங்களது எதிரான கட்சிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்த அரசாக மோடி அவர்கள் தலைமையிலான அரசு வரலாற்றில் பதியப்படும். அதற்கு மகாராஷ்ராவே சிறந்த சாட்சி.
எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவதும், முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொட்டி, விசாரணை அமைப்புகளை ஏவி அவர்களது ஆட்சியைக் கவிழ்ப்பதும் பா.ஜ.கயின் முழுநேரத் தொழிலாக மாறிவிட்டது. தன்னை எதிர்ப்பவர்களே அரசியலில் இருக்கக்கூடாது என நினைப்பதும் செயல்படுவதும் சர்வாதிகாரம். இந்தியாவில் தற்போது அரசியல் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சியில் நாடாளுமன்றத்துக்கும் மதிப்பு இல்லை, நீதிமன்றங்களுக்கும் மதிப்பில்லை. தேர்தல் ஆணையம் இந்த அரசின் தலையாட்டி பொம்மையாக ஆகிவிட்டது. E.D., C.B.I., I.T., என எல்லா உயர் அமைப்புகளின் சுதந்திரத்தையும் பறித்துவிட்டு, கூட்டணிக்கு ஆள் பிடிக்கிற – அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிற – தங்களுக்கு விருப்பத்துக்கேற்ப செயல்படும் ஏவல் அமைப்புகளாக மாற்றிவிட்டார்கள்.
நரேந்திர மோடி என்கிற தனிநபரிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பறிப்பது எங்கள் நோக்கம் அல்ல, யார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ வன்மமோ எங்களுக்கு இல்லை. மீண்டும் பா.ஜ.க.விடம் ஆட்சியைக் கொடுத்தால் நாம் பார்த்த இந்தியாவே இனி இருக்காது. அதனால் எதிர்க்கிறோம்.
தனித்தனி கட்சிகளாக இருந்தாலும் – தாய்நாடான இந்தியாவைக் காப்பாற்றுவது ஒன்றே எங்களது இலக்கு. அரசியல் லாபங்களுக்காக நாங்கள் அணி சேரவில்லை. இந்தியாவின் இறையாண்மையை – மாண்பை – மதச்சார்பின்மையை – சமூகநீதியை – சகோதரத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக சேர்ந்திருக்கிறோம். அந்த இலட்சியத்தை மக்கள் சக்தியோடு நாங்கள் வெல்வோம். பா.ஜ.க வீழ்த்த முடியாத சக்தி அல்ல, வெவ்வேறு மாநிலங்களில் தனித்தனியாக வீழ்த்தப்பட்ட கட்சிதான் பா.ஜ.க
மிருக பலம் எனப்படும் ‘brute majority’ இருந்தும் ஏழை, எளிய மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த நன்மையும் வரவில்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தற்போது அதிகரித்து வரும் வெறுப்பரசியல் சூழலால், சராசரி இந்திய குடிமகனின் எதிர்காலம் – அப்பாவி மக்களின் உயிருக்கும் உடைமைக்குமான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. பா.ஜ.க முன்னெடுக்கும் வெறுப்பு அரசியலாலும், வகுப்பு மோதல்களாலும், தங்களுக்கு வேண்டிய பெருமுதலாளிகளுக்குத் துணைபோகும் செயலாலும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்திருக்கிறது.
ஒரு நாடு ஒரு வரி, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரே கல்வி, ஒரு நாடு ஒரே தேர்தல், ஒரு நாடு ஒரே கட்சி என ஒற்றையாட்சியை – ஒற்றைக் கட்சி நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கும் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது.
இந்தியாவைப் பாதுகாக்கிற மகத்தான அரசியல் களத்தில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள எதிர்க்கட்சிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளன. இந்திய மக்கள் ஒவ்வொருவரும் – இந்தியாவைக் காக்கிற போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டு ஊடகங்களான உங்கள் ஆதரவையும் கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!