Friday, November 15, 2024
Home Uncategorized கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு...

கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்துவிட்டேன்.

“கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவரை கடைசியா பார்த்தது..”, கலைஞரை இறுதியாக சந்தித்த நடிகர் சிவகுமார் .

தமிழகத்தின் தவப்புதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் நினைவுகளை போற்றும் இந்நன்நாளில் கலைஞரை , நடிகர் சிவக்குமார் இறுதியாக 2017 September 13th அன்று தான் சந்தித்த தருணம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

“கலைஞர் நினைவு இழந்து படுக்கையில் இருந்த தருவாயில், நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது தமிழும், செல்வியும் என்னை கலைஞரிடம் அழைத்து சென்று “ சிவக்குமார் அண்ணன் வந்திருக்கார் பாருங்க” என்று கூறினார்கள். அவர் முகம் எந்த வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. அப்போது, தமிழருவி மணியனுடைய “ சிவாஜி எனும் தவப்புதல்வன்” புத்தகம் எழுந்தியிருந்தார். அதில் இடம்பெற்ற மனோகரா படத்தின் தர்பார் காட்சியை டி வி யில் போட்டு, அவர் அருகில் சத்தம் அதிகமாக வைத்து அவரை அதை கேட்கவைக்கலாம் என யோசித்தோம். அந்த காட்சியை போட, அதன் வசனம் “புருசோத்தமரே புரட்டு காலின் இருட்டு மொழியிலே “ என தொடங்கும் நீளமான அந்த உணர்ச்சிகரமான வசனத்தை 1.30 நிமிடம் போட்டோம். அவர் அருகே சென்று பார்த்தோம் முகத்தில் எந்த உணர்வும் இல்லை, நான் அருகில் சென்று பார்த்தேன்.. மூக்கு விடைக்கல.. உதடு துடிக்கல.. ஆனா.. கண்ணில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. அப்படியே அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவரை கடைசியா பார்த்தது..”, என்றார் சிவகுமார் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments