Friday, November 15, 2024
Home Uncategorized மதங்களைக் கடந்த மனிதநேயமே நமது மக்களின் இயல்பான வாழ்க்கை.

மதங்களைக் கடந்த மனிதநேயமே நமது மக்களின் இயல்பான வாழ்க்கை.

மாமனிதன் திரைப்படத்தின் மையப் பொருள் இது. மதமாச்சரியங்களால் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும் பிளவுவாத நச்சுக் கருத்துக்கள் பரப்பப்படும் காலச்சூழலில் மக்களிடம் அன்பை போதிக்கும் நற் சிந்தனையைக் கொண்டுள்ளதற்காக, ருஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் 45 வது திரைப்பட விழாவில் திரையிட மாமனிதன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ திரைப்பட விழாவில் பங்கேற்க ருஷ்ய அரசால் இயக்குநர் சீனுராமசாமி அழைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 52 திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளது இத்திரைப்படம். இச் சிறப்புகளுக்காக இயக்குநர் சீனுராமசாமியை சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஇரவு விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவரும் மதுரை எம். பி. யுமான சு. வெங்கடேசன் பாராட்டி சிறப்பித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments