மும்பை, ஏப்ரல் 3, 2023: டாடா ஐபிஎல் 2023 இன் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஜியோ சினிமா, அறிமுகமான தொடக்க வார இறுதியில் பெரிய அளவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. TATA IPL இன் கடைசி சீசன் முழுவதும் டிஜிட்டலில் பார்வையாளர்கள் பார்வையிட்டதை விட JioCinemaவில் தனியாக முதல் வார இறுதியில் பார்வையாளர்களின் பலமடங்கு அதிகரித்துள்ளது. இது 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை பார்வையிட்ட பார்வையாளர்களை விடவும் அதிகமாகும்.
ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளரின் சராசரி நேரம் 57 நிமிடங்களைத் தொட்டதால், ஜியோசினிமா ரசிகர்களை மையப்படுத்திய நடத்திய விளக்கக்காட்சியால் பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டனர். கடந்த சீசனின் முதல் வார இறுதியுடன் ஒப்பிடும்போது, ஜியோசினிமாவில் ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளருக்கு செலவிடப்படும் நேரம் 60% அதிகரித்துள்ளது. ஜியோசினிமாவில் வீடியோ காட்சிகளை பார்வையிட்ட பார்வையாளர்களின் எணிக்க்கை 147 கோடிக்கு மேல் கடந்துள்ளது. டாடா ஐபிஎல்லில் டிஜிட்டலில் இதுவரை இல்லாத அதிகபட்ச தொடக்க வார சாதனை இதுவாகும்.
இதுதொடர்பாக என்று வயாகாம்18 ஸ்போர்ட்ஸ் தலைமைச் செயலல் அதிகாரி அனில் ஜெயராஜ் கூறும்போது,”இந்த எண்கள் விதிவிலக்கானவை மற்றும் நாடு முழுவதும் டிஜிட்டல் புரட்சி பரவி வருவதற்கான சான்றுகள். டிஜிட்டல் இலக்கு, முகவரி மற்றும் ஊடாடலை சேர்ந்தது. மரபுச் சேவைகளைப் போலன்றி, டிஜிட்டலில் அளவீடு என்பது பார்ப்பதற்கு வரும் நபர்களின் சரியான எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு சிறிய மாதிரித் தொகுப்பிலிருந்து அகநிலை விரிவாக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது அல்ல. உள்ளடக்க நுகர்வுக்கான களம் இந்த வாரம் டிஜிட்டல் மற்றும் ஜியோசினிமா செயல்திறன் மாற்றியமைக்க முடியாத அளவிற்கு நகர்ந்துள்ளது, இது மிகப்பெரிய சான்றாகும்.
டாடா ஐபிஎல் 2023 இன் தொடக்க வார இறுதியில் நாங்கள் கண்டது, போஜ்புரி, பஞ்சாபி, ஒரியா உள்ளிட்ட தனித்துவமான முதல் முறை கிரிக்கெட் ஒளிபரப்பு மொழிகளில் லீக்கை அணுகக்கூடியதாகவும், மலிவு விலையாக மாற்றுவதற்காக ஜியோசினிமாவின் சலுகைகளில் பார்வையாளர்கள் காட்டிய நம்பிக்கையின் சாட்சியமாகும். ஒவ்வொரு ரசிகரின் டாடா ஐபிஎல் பார்வை அனுபவத்தை உயர்த்த நாங்கள் பாடுபடும் இந்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்ததற்காக எங்கள் ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
ஜியோசினிமா எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான சீசன்-தொடக்க மோதலுடன் தனது தொனியை அமைத்தது, இது 1.6 கோடி பார்வையாளர்களின் உச்சத்தை எட்டியது. கூடுதலாக ஜியோசினிமா செயலியை 2.5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் ஒரே நாளில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற சாதனையை படைத்துள்ளது.
10 கோடிக்கும் மேலான வலுவான பார்வையாளர்களுடன் புதிய பார்வையாளர்கள் மற்றும் புதிதாக 5 கோடி பேர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளது என இந்த வார இறுதியில் ஜியோசினிமா ரசிகர்களை மையமாகக் கொண்ட விரிவான அம்சங்களின் பின்னணியில் வருகிறது. 4K ஃபீட், 12-மொழி கவரேஜ், 16 தனித்துவமான ஃபீட்கள், ஹைப் மோட் மற்றும் மல்டி-கேம் அமைப்பு போன்ற தனித்துவமான அம்சங்களை ரசிகர்கள் தொடர்ந்து பயன்படுத்தினர்.
தொடக்க வார இறுதிக்கு முன்னோடியில்லாத வரவேற்பைப் பெற்ற பிறகு, ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ஜியோசினிமா ஒவ்வொரு வாரமும் புதிய அம்சங்களை வெளியிட உள்ளது.
STB, Apple TV, Amazon Firestick, OnePlus TV, Sony, Samsung, LG மற்றும் Xiaomi உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட OEM மற்றும் CTV இயங்குதளங்களுடனான தனிப்பயனாக்கப்பட்ட சாதன ஒருங்கிணைப்பு கூட்டாண்மை மூலம் டாடா ஐபிஎல் டிஜிட்டலில் அதிக பார்வையாளர்கள் சாதனைக்கு ஆதரவாக இருந்துள்ளன. கூடுதலாக, CTV பார்வையாளர்கள் உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக்கை 4K இல் முதன்முறையாக JioCinema மூலம் தொடர்ந்து பார்க்கின்றனர்.
ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, ஒரியா, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 12 மொழிகளில் இந்தியாவின் விருப்பமான விளையாட்டு திருவிழாவானடாடா ஐபிஎல் தொடர் ஜியோசினிமாவில் பார்வையாளர்களுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டை ரசிக்க புதிய வழியை வழங்குவதன் மூலம், தி இன்சைடர்ஸ் ஃபீட், ஹேங்கவுட் ஃபீட், பேண்டஸி ஃபீட் மற்றும் ஃபேன்ஸோன் ஃபீட் உள்ளிட்ட நான்கு கூடுதல் உள்ளீடுகளையும் ஜியோசினிமா வழங்குகிறது.
டாடா ஐபிஎல் 2023 இன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்காக JioCinema உடன் 20க்கும் மேற்பட்ட சிறந்த பிராண்டுகள் கூட்டு சேர்ந்துள்ளன. இதில் இணை ஸ்பான்சர்களும் அடங்குவார்கள். Dream11 (இணை ஸ்பான்சன்), JioMart, PhonePe, Tiago EV, (அசோசியேட் ஸ்பான்சர்) Appy, Fizz, ET Money castrol, TVS, Oreo, Bingo, Sting, AJIO, Haier, RuPay, Louis Philippe Jeans, Amazon, Rapido, Ultra Tech Cement, Puma, Kamla Pasand, Kingfisher Power Soda, Jindal Panther TMT Rebar உள்ளிட்ட முன்னிணி நிறுவனங்கள் ஜியோ சினிமாவுடன் கைகோர்த்துள்ளன.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகியவை 2023 பதிப்பிற்கு முன்னதாக ஜியோசினிமாவுடன் பிரத்யேக பார்ட்னர்ஷிப்களை அறிவித்தன. உலகளாவிய கிரிக்கெட் ஐகான் சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கேப்டன் மற்றும் நான்கு முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற எம்எஸ் தோனி, உலகின் நம்பர். 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஜியோசினிமாவுடன் கைகோர்த்து, அவர்களின் உலகத்தரம் வாய்ந்த, டிஜிட்டலில் டாடா ஐபிஎல் தொடர்பாக விளக்கிக் கூறினர்.
ஜியோ சினிமா செயலியை (iOS & Android) பதிவிறக்குவதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர்ந்து பார்க்கலாம். சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள், ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ரசிகர்கள் Facebook, Instagram, Twitter மற்றும் YouTube இல் Sports18-ஐ பின்தொடரலாம். மேலும் Facebook, Instagram, Twitter மற்றும் YouTube இல் ஜியோ சினிமாவையும் பின்தொடரலாம்.
ஜியோ சினிமாவை பதிவிறக்கம் செய்து, IPL தொடரின் அனைத்து செயலையும் பார்த்து மகிழுங்கள்.