Friday, November 15, 2024
Home Uncategorized Actor Sasikumar Released the Title of Director SR Prabhakaran' s'Rekkai Mulaithen'

Actor Sasikumar Released the Title of Director SR Prabhakaran’ s
‘Rekkai Mulaithen’

SR Prabhakaran had made his debut as a director with the Sasikumar starrer, ‘Sundarapandian’. After that, he directed Udhayanidhi Stalin’s “Idhu Kathirvelan Kadhal’,
Vikram Prabhu’s “Sathriyan’ and Sasikumar’s ‘Kombu Vecha Singham Da’. He has now started a production company called Pankajam Dreams Productions and has also directed its first venture. Actress Tanya Ravichandran has played the lead role in the film.
This heroine- centric movie has been titled “Rekkai Mulaithen”.

This is a a crime thriller while his earlier films were about love and friendship.
Besides Tanya Ravichandran as the female protagonist, the cast includes Jayaprakash, Aadukalam Naren, Bose Venkat, Jeeva Ravi, Meera Krishnan and others.
Ganesh Santhanam is the cinematographer. for the film. Theesan, who composed the music for Kida, has scored the music for the film. Don Bosco is the editor. Songs have been penned by Karthik Netha and A. Pa. Raja.

Director and actor Sasikumar has released the title of the film.
The First Look Poster has been unveiled by director Samuthirakani, Karthik Subbaraj and Madonna Sebastian and actor Suri.

Director SR Prabhakaran talks about the film…

The film has been shot in locations at Chennai, Munnar, Thekkady, Vagaman.
The has been made in such a manner that will certainly appeal to college going youngsters.
So far, I have made films mostly with male protagonists. But as a writer, I have always wanted to come up with well-conceived stories that are commercially viable churned out by debutante filmmakers.
That is exactly why I have started this production company to patronise good scripts as well as aspiring directors.

Cast & Crew

Tanya Ravichandran

Jayaprakash

Aadukalan Naren

Bose Venkat

Jiva Ravi

Meera Krishnan

Cinematography – Ganesh Santhanam

Music – Theeson

Editing – Don Bosco

Art Direction – Prem

Lyrics – Karthik Netha, A. Pa. Raja

Dance – Nanda

Public Relations – Shiek

Advertising Assistance- Riaz

இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் “றெக்கை முளைத்தேன்” – படத்தின் தலைப்பை நடிகர் சசிகுமார் வெளியிட்டார்!

சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின்‌ மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன், சசிகுமார் நடித்த கொம்பு‌ வெச்ச சிங்கம் டா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர்‌ தற்போது முதல் முறையாக பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் படத்தை தானே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு “றெக்கை‌ முளைத்தேன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை நண்பர்கள், காதல் என்று குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து வந்த இவர் இப்படத்தை க்ரைம் த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் உடன் ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், மற்றும்
சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா எனும் நான்கு புதுமுகங்களையும் அறிமுகம் செய்துயுள்ளார்.

இப்படத்திற்கு கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிடா படத்திற்கு இசை அமைத்த தீசன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். டான் பாஸ்கோ படத்தொகுப்பு. பாடல்களை கார்த்திக் நேத்தா, அ.பா.ராஜா எழுதியுள்ளார்.

இப்படத்தின் தலைப்பை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், மற்றும் மடோனாசெபாஸ்டின், நடிகர் சூரி வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை பற்றி இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் கூறியதாவது

இப்படம் சென்னை, மூணார், தேக்கடி, வாகமண் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை கதாநாயகனை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுத்து வந்தேன். ஆனால் ஒரு எழுத்தாளராக நல்ல கருத்துள்ள கதைகளை‌ கதாநாயகர்களை மையபடுத்திய படங்களில் சொல்ல முடியவில்லை. நல்ல கதைகளை தொடர்ந்து கமர்ஷியலாக பதிவுசெய்ய விரும்புகிறேன் அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நல்ல கதைகளையும் நிறைய புதுமுக இயக்குனர்களையும் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளேன் இவ்வாறு கூறினார்….

நடிகர்கள் – தொழில்நுட்ப கலைஞர்கள்

தான்யா ரவிச்சந்திரன்

ஜெயப்பிரகாஷ்

ஆடுகளம் நரேன்

போஸ் வெங்கட்

ஜீவா ரவி

மீரா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு – கணேஷ் சந்தானம்

இசை – தீசன்

எடிட்டிங் – டான் பாஸ்கோ

கலை – பிரேம்

பாடல்கள் – கார்த்திக் நேத்தா
ஆ.பா.ராஜா

நடனம் – நந்தா

மக்கள் தொடர்பு – ஷேக்

விளம்பர உதவி- ரியாஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments