Made on a spectacular scale by producer V. Raja under the banner, White Screen Production, the film is scheduled for theatrical release on December 30th 2022 after overcoming several challenges!
The maker of films as Silandhi, Ranathanthra (Kannada) and Ninaivellam Neeyada which has music by Maestro Ilayaraja, the film has been scripted and directed by Aadhiraajan.
While speaking about the film, Aadhiraajan says…
Though times have changed and civilization has reached new heights, communal clashes and caste based honour killings are very much present in existence in the current scenario which find place in the print and visual media !
Caste based Associations erect banners to promote and publicize their castes and eventually pave way for such communal clashes. This film reflects that prevailing trend in the present situation!
Newcomer Raja plays the hero while Malavika Menon plays the female lead. Basically being a Kabaddi player, Raja has performed exceptionally in the stunt sequences. He has done well in the emotional scenes as well.
National Award winning actress Saranya Ponvannan has donned a very different character which she has not done before! She plays a brick klin worker and had to spend one and a half hours for make-up! This is her career best character, so far!
Aadukalam Naren and Soundarraja play the villains to tailor made perfection!
Ganja Karuppu, Kadhal Sugumar, Vijay TV Sarath, Director Marimuthu, Madurai Sujatha and many others have lived their characters!
As the screenplay showcases many Kabbadi Competitions, real Kabbadi players have participated and hence the scenes will appear very realistic, thanks to the efforts of Santhosh Pandi, the cinematographer.
Dharan Kumar is the composer.
Vairamuthu is the lyricist.
I have penned two songs – one about Kabbadi & the other is a Mother Sentiment song- remarks Aadhiraajan.
Popular actress Remya Nambisan had rendered her voice to the “Sittu Sittu Kuruvi…” song written by Vairamuthu.
V. J. Sabu Joseph is the editor.
Dance Masters- Dheena and Radhika have choreographed the dance sequences.
Thalapathi Dinesh is the stunt choreographer.
Suresh Kalleri is the art director.
The film’ s dialogue will be talked about.
Saranya Ponvannan is certain to bag awards for her powerful performance.
A never before seen climax will rock and is certain to be first of its kind! The climax portions will make the audience leave the theatres with wet eyes!
Director Pa. Ranjith is championing the cause of a particular section of people through his films. Directors like Mohan G and Muthiah are making films representing few other groups.
Aruva Sanda will strike a balance between both while talking about issues pertaining to both the sides!
Saying so, Aadhiraajan signs off..
“உயிரோட்டமான கதைக்களம்… உலுக்கி எடுக்கும் க்ளைமாக்ஸ் “
காதல் சண்டையும் கபடி சண்டையும் தான் “அருவா சண்ட”!!
இயக்குநர் ஆதிராஜன் சொல்கிறார்!!
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் “அருவா சண்ட”.
பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது. சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், “அருவா சண்ட” படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இப்படத்தை பற்றி இயக்குநர் கூறியதாவது:
என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் ஜாதி சண்டைகளும் கௌரவக் கொலைகளும் தினசரி பத்திரிகைகளிலும் சேனல்களிலும் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டு தான் இருக்கிறது. சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைப்போம் என்று வாய் கிழியப் பேசினாலும் சாதிக்கு ஒரு சங்கம் வைத்து வீதிக்கொரு பேனர் வைக்கும் கலாச்சாரத்தில் இருந்து தமிழகம் மீளவில்லை. எனவே சமகால சமுதாயத்தின் பிரதிபலிப்பு தான் இந்த படம். இதில் புதுமுகம் ராஜா நடித்த கதையின் நாயகனாகவும், மாளவிகா மேனன் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். இருவரும் நடிப்பில் போட்டி போட்டு தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கின்றனர். கபடி வீரரான ராஜா கபடி காட்சிகளில் தன் திறமையை காட்டியிருப்பதுடன் சண்டை காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் நிச்சயமாக ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பது உறுதி.
தேசிய விருது பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் இதுவரை நடிக்காத மாறுபட்ட கதாபாத்திரத்தில் வள்ளியம்மாவாக வாழ்ந்திருக்கிறார். இந்த படத்திற்காக தினமும் ஒன்றை மணி நேரம் டல் மேக்கப் போட்டு தன்னை ஒரு செங்கல் சூளை தொழிலாளியாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். இந்த கேரக்டரை வேறு யாராலும் இத்தனை சிறப்பாக கையாண்டிருக்க முடியாது. அதேபோல ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா இருவரும் வில்லன்களாக வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். இருவருக்குமே இந்த படம் இன்னொரு “சுந்தரபாண்டியனாக” இருக்கும்.
கஞ்சா கருப்பு காதல் சுமார் விஜய் டிவி சரத் டைரக்டர் மாரிமுத்து மதுரை சுஜாதா வெங்கடேஷ் ரஞ்சன் யாசர் ரமேஷ் மூர்த்தி வீரா நிஷா ஆகியோரும் கதாபாத்திரங்களாகவளே மாறியிருக்கிறார்கள். இந்த படத்தில் பல கபடி போட்டிகள் இடம் பெறுகின்றன. நிஜமான கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி இருக்கின்றார்கள். பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு கபடி போட்டிகளை விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி. தரண்குமார் இசையமைத்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார். “வீரத்தமிழன் விளையாட்டுடா…” என்ற கபடிக்கான சிறப்பு பாடலையும், அம்மா பாடலையும் நான் எழுதி இருக்கிறேன். வைரமுத்து எழுதிய “சிட்டு சிட்டு குருவி” பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். வி ஜே சாபுஜோசப் எடிட்டிங் செய்திருக்கிறார். தீனா, ராதிகா மாஸ்டர்கள் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர். தளபதி தினேஷ் சண்டைக்காட்சி அமைக்க சுரேஷ் கல்லேரி கலை ஆக்கத்தை கவனித்திருக்கிறார்.
படம் முழுவதும் வசனங்கள் வாள் சண்டை நடத்தும். கிளைமாக்ஸ் காட்சி உயிரை உலுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய சினிமாவில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ் வந்ததே இல்லை.படம் முடிந்து போகும் போது கலங்காத நெஞ்சமும் கலங்கிவிடும். கசியாத விழிகளும் கசிந்து விடும்.இது சத்தியம். சரண்யா மேடத்திற்கு இந்த படம் பல விருதுகளை அள்ளித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு சமூகத்திற்காக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர்கள் முத்தையா, மோகன் ஜி ஆகியோர் வெவ்வேறு சமுதாயத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். ஆனால் “அருவா சண்ட” இரண்டு தரப்பு நியாயங்களையும் அநியாயங்களையும் உரக்கப் பேசும்…. அனல் பறக்கப் பேசும் என்பது உறுதி” இவ்வாறு ஆதிராஜன் கூறினார்.