Friday, November 15, 2024
Home Uncategorized கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு.

கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு.

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’ .

கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் , அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிறபடமாக இருக்கும்.

பரபரப்பான திருப்பங்களோடு காதல் நட்பு நகைச்சுவை கலந்த கம்ர்சியலான படமாகவும் இருக்கும் கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஜெய் அமர்சிங்.

இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.இரஞ்சித்.

இந்த படத்தை பார்த்த கல்லூரி மாணவர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

PVR இந்த படத்தை வெளியீடு செய்கிறார்கள்.

டிசம்பர் 30 படம் வெளியாகிறது.

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments