Friday, November 15, 2024
Home Uncategorized முத்துநகர் படுகொலை' படத்தை வெளியிடுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது - உயர் நீதிமன்றம்

முத்துநகர் படுகொலை’ படத்தை வெளியிடுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது – உயர் நீதிமன்றம்

2018 மே மாதம் 22 & 23 தேதிகளில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய அறவழிப் போராட்டம் பற்றிய புலனாய்வு ஆவணப்படம் ‘முத்துநகர் படுகொலை’.

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை M.S.ராஜ் இயக்கியுள்ளார். முத்துநகர் படுகொலை இரண்டு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஒரு சர்வதேச விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தின் போஸ்டர் வெளிவந்த சில தினங்களுக்குள் ஸ்டெர்லைட் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் படத்தின் இயக்குனர் M.S.ராஜ் தூத்துக்குடி மத்திய காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சம்மன் அனுப்பியது.எந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கிறீர்கள், ஸ்டெர்லைட் அளித்த புகாரை அனுப்புங்கள் என்று பதில் அனுப்பினோம்.காவல்துறை தரப்பில் பதில் இல்லை.

சென்னையில் ட்ரெய்லர் வெளியீட்டின் போது அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் உருவாக்க முயற்சி நடந்தது.அதையும் மீறி விழா சிறப்பாக நடந்தது.

தற்போது மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த திரு முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.முத்துநகர் படுகொலை படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.நீதியரசர் G.R. சுவாமிநாதன் ” படத்தை வெளியிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ” என்று அறிவுறுத்தியதை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். முத்துநகர் படுகொலை படத்திற்கு தொடரும் அச்சுறுத்தல்களை மக்களின் துணையுடன் எதிர்கொள்வோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments