Actor Krishna of Tribal Horse Entertainment is producing a web series titled ‘Jhansi’ for Disney+ Hotstar. Directed by Thiru, the 10-episode thriller series is written by Ganesh Kaarthic and features Anjali as the titular character. The series revolves around the journey of a woman, who has no memory of her past but is trying to figure out the mystery behind what keeps haunting her.
Jhansi is premiering on Disney+ Hotstar on October 27 in Tamil, Telugu, Hindi and other languages worldwide.
The cast and crew of this series interacted with the press and media fraternity and here are some of the excerpts from the event.
Actor Adithya said, “Krishna sir is the producer of my first project. After watching my 30 minutes of the showreel, he appreciated me a lot. Being an actor, one needs a great heart to appreciate another actor. When he called me for this project, there was no second thought, and I immediately agreed to be a part of it. I have dubbed in my own voice for the Telugu version as well. I believe and hope that everyone will like this series.”
Writer Ganesh Kaarthic said, “After completing the script, I approached many people and that’s when I met Krishna sir. He was very impressed with the story and instantly agreed to produce it. The story is about the anger and aggressiveness of a helpless woman. We have created this work with utmost care and dedication. I worked with Thiru sir and learned a lot. Anjali will completely step into the shoes of the character once the camera is switched on. She is such a gem and a talented actress. This is my first step in the movie industry. I am confident that all of you will like Jhansi. Thank you.”
Cinematographer Arvi said, “The story traverses through the episodes from the time of the 90s to the current period. We have created the visuals according to characterizations and story backdrops. Every crew member has exercised tremendous hard work. I thank everyone for their earnest support.”
Director Thiru said, “Initially when Krishna called me and spoke about this series, I was a little hesitant to direct a web series. I had lots of doubts and insecurities about the web series. It’s because this is a project that has to be created on a big scale. As a team, we have done our best and completed the project as a 10-episode series at the planned budget. The screenplay is the biggest plus in this series and the writers have done fabulous work, which will be appreciated by you all. Earlier, I envisaged that I would direct Krishna as an actor, but it’s a surprise to see that he has produced my work now. He took care of me entirely throughout the process of creating this project. Ganesh Kaarthic will be soon proving his caliber as an outstanding filmmaker. Anjali has performed jaw-dropping action sequences in this series. The entire team has worked a lot to shape this project. I believe the series will enthrall you all as an engrossing package.
Actress Sharanya said, “This is my first web series in Tamil. I have essayed the role of Krithi, who is an acid attack victim. Working in this series offered me a fresh experience. I learned a lot from director Thiru. I thank producer Krishna, the director, and the entire team for this great opportunity.”
Actor/Choreographer Kalyan said, “Krishna and I are like brothers. When he asked me if I can perform a role in this series, I immediately agreed. Working in this series was more like an outing for me. The entire ambiance of shooting was filled with so much fun and positivity.”
Director Satya Siva said, “I have known Krishna sir as a fabulous actor, and I predicted that he would be a good producer while shooting with him for Kazhugu. When we didn’t get any producers for the Kazhugu movie, he took a special interest and pitched the script to many producers. He will earn a great reputation as a producer. Our next venture ‘Bell Bottom’ is gearing up for release shortly. I request everyone to support us.”
Executive Producer Ram said, “Jhansi is a 2-yr hard work of our entire crew, and everyone has exerted their best into this project. I strongly believe that all our hard work will be rewarded with good appreciation and reception.”
Actor Krishna said, “I didn’t have any releases this year, and my next would be Bell Bottom. Embarking on a production journey has been a long-run dream for me, and this is our third creation. When I pitched this idea to Disney+ Hotstar, they immediately agreed to materialize it. When I told GK that a well-experienced filmmaker directing it will add more value to ‘Jhansi’, he instantly accepted the idea. I asked Thiru to let GK direct at least a single episode, and he graciously agreed for me. We got talented artistes like Anjali and others from many regional industries. (On a humorous note) Despite my request to the creative and technical team to offer me a character, they didn’t heed to my request. I thank Hotstar for giving me this great opportunity. This creation is so close-to-our-heart and we believe that you all will like it as well.”
Star-Cast
Anjali, Chandini Chowdary, Raj Arjun, Aadarsh Balakrishna, Rameswari Talluri, Samyukta Hornad, Sharanya Ramachandran, Suresh Chakravarthy, Kalyan master, Mumaith Khan and others.
Technical Crew
Director – Thiru
Director of Photography – Arvi
Music Director – Sricharan Pakala
Editor- Anthony
Stunt Choreographer- Yannick Ben
Costumes – Anu Vardhan
Art – Raj Kamal
Producer: Krishna Kulasekaran
Production House: Tribal Horse Entertainment
Platform: Disney+ Hotstar
நடிகை அஞ்சலி நடிப்பில், “ஜான்ஸி” இணைய தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
Tribal Horse Entertainment நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்காக, இயக்குநர் திரு இயக்கத்தில், கணேஷ் கார்த்திக்கின் கதை மற்றும் திரைக்கதையில், நடிகை அஞ்சலி முதன்மை வேடத்தில் நடிப்பில் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடர் “ஜான்ஸி”. வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், கடந்த காலத்தின் பின்னிருக்கும் ரகசியங்களை தேடுவதே, இந்த தொடரின் கதை.
இந்த தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி முதலாக பல மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.
இத்தொடரின் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பத்திரிக்கையாளர் முன் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவினில்..
நடிகர் ஆதித்யா பேசியதாவது…
என்னுடைய ஃபர்ஸ்ட் புராஜக்ட்டுக்கு கிருஷ்ணா சார் தான் புரடியூசர். அவர் என் ஷோ ரீல் பார்த்து அரை மணி நேரம் பாராட்டினார். ஒரு நடிகராக இருந்துகொண்டு அடுத்தவரை பாராட்ட பெரிய மனம் வேண்டும். அவர் கூப்பிட்ட போது நான் யோசிக்கவே இல்லை. உடனே ஒப்புக்கொண்டேன். தெலுங்கில் நானே டப் பண்ணியிருக்கேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
எழுத்தாளர் கணேஷ் கார்த்திக் பேசியதாவது…
இந்தகதையை எழுதிவிட்டு பலரிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணா சாரை சந்தித்தேன். அவர் கேட்டவுடன் இதை நாம் பண்ணலாம் என்றார். இயலாமை கொண்ட ஒரு பெண்ணின் கோபம் தான் இந்தக்கதை. மிகவும் அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம். திரு சாரிடம் இத்தொடரில் வேலை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். அஞ்சலி கேமரா முன் வந்துவிட்டால் அப்படியே கதாப்பாத்திரமாக மாறிவிடுவார். மிக திறமைசாலி. என்னுடைய திரை வாழ்வின் ஆரம்ப பயணம் இந்த “ஜான்ஸி”. உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
ஒளிப்பதிவாளர் அர்வி பேசியதாவது…
இந்தக்கதையில் 90s காலகட்டம் முதல் இப்போது வரையிலான சம்பவங்கள் இருக்கிறது. கதாபாத்திரங்களின் மூடுக்கேற்றவாறு, கதைக்கேற்றவாறு ஒளிப்பதிவு செய்துள்ளோம். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள் எல்லோருக்கும் நன்றி.
இயக்குநர் திரு பேசியதாவது…
கிருஷ்ணா என்னிடம் போன் செய்து இந்தக்கதை பற்றி சொன்னார். முதலில் வெப் சீரிஸாக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது. மிகப்பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டிய கதை. எல்லோரும் சேர்ந்து அதை குறிப்பிட்ட பட்ஜெட்டில் 10 எபிஸோடில் எடுத்துள்ளோம். இதில் மிகப்பெரிய ப்ளஸ் திரைக்கதை. மிக அட்டகாசமாக எழுதியிருந்தார்கள் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். கிருஷ்ணாவுடன் நடிகராக அவரை இயக்கி வேலை பார்ப்பேன் என நினைத்தேன் ஆனால் அவர் புரடியூசராக இருக்கும் படைப்பில் வேலை பார்த்திருக்கிறேன். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார். ஒளிப்பதிவாளர் மிக அட்டகாசமாக செய்துள்ளார். ஜீகே மிக சிறந்த இயக்குநராக வருவார். அஞ்சலி இதில் அதிரடி ஆக்சன் பண்ணியிருக்கார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி.
நடிகை சரண்யா பேசியதாவது….
தமிழில் எனக்கு முதல் வெப் சீரிஸ். கிரித்தி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளேன். மிக புதுமையான அனுபவமாக இருந்தது. இயக்குநர் திருவிடம் நிறைய கற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர் கிருஷ்ணா, இயக்குநர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
நடிகர்/நடன இயக்குனர் கல்யாண் பேசியதாவது…
கிருஷ்ணாவும் நானும் சகோதரர்கள் மாதிரி பழகுவோம். அவர் இதில் நடிக்கிறீர்களா என கேட்டவுடன் உடனே ஓகே சொல்லி விட்டேன். ஒரு அவுட்டிங் மாதிரி தான் இந்தப் படப்பிடிப்பு இருந்தது. மிக ஜாலியாக என்ஜாய் செய்தோம். இந்த தொடர் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் பாருங்கள். நன்றி.
இயக்குநர் சத்ய சிவா பேசியதாவது…
கிருஷ்ணா சாரை நல்ல நடிகராக தெரியும். அவர் கண்டிப்பாக புரடியூசர் ஆவார் என கழுகு டைம்ல இருந்தே தெரியும். கழுகு கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்காத போது, அதை பலரிடம் எடுத்து சென்றவர் அவர் தான். அவர் கண்டிப்பாக ஒரு நல்ல புரடியூசராக ஜெயிப்பார். எங்கள் கூட்டணியில் அடுத்து “பெல்பாட்டம்” படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ராம் பேசியதாவது…
ஜான்ஸி எங்கள் இரண்டு வருட கால உழைப்பு. இதில் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். அவர்கள் உழைப்பின் பலன் இதில் கண்டிப்பாக கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
நடிகர் தயாரிப்பாளர் கிருஷ்ணா பேசியதாவது….
இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக “பெல் பாட்டம்” வருகிறது. எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு … ஹாட்ஸ்டாரில் இந்த கதையை சொன்னவுடன் ஒப்புக்கொண்டார்கள். ஜீகேயிடம் இதை பெரிய டைரக்டர் பண்ணினால் நல்லாருக்கும் என்றவுடன் ஜீகே ஒப்புக்கொண்டார். திருவிடம், ஜீகே ஒரு எபிஸோடாவது டைரக்ட் பண்ணணும் என்றேன். அவரும் பெருந்தன்மையாக ஓகே என்றார். அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். நான் இதில் நடிக்கவில்லை எனக்கு எதாவது கொடுங்க எனக் கேட்டேன். ஆனால் கடைசி வரை தரவில்லை. இந்த தொடர் மிக நன்றாக வந்துள்ளது. முக்கியமாக இத்தொடருக்கு பெரும் ஒத்துழைப்பு தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்க்கு நன்றி. இது எங்கள் மனதுக்கு பிடித்த படைப்பு, உங்களுக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர்கள்
அஞ்சலி, சாந்தினி சௌத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ராமேஸ்வரி தல்லூரி, சம்யுக்தா ஹார்நாட், சரண்யா ராமச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், முமைத் கான் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் – திரு
ஒளிப்பதிவு – அர்வி
இசை – ஶ்ரீசரண் பக்கலா
எடிட்டர்- ஆண்டனி
சண்டைப்பயிற்சி இயக்குநர் – யானிக் பென்
உடை வடிவமைப்பு – அனு வர்தன்
கலை – ராஜ் கமல்
தயாரிப்பாளர் – கிருஷ்ணா குலசேகரன்
தயாரிப்பு நிறுவனம் – Tribal Horse Entertainment
ஓடிடி தளம் : டிஸ்னி+ ஹாட்ஸ்டார்