Boney Kapoor’s Bayview Project LLP in association with Romeo Pictures Rahul is producing the movie titled ‘Nenjukku Needhi’. The movie, a remake of Article 15, features Udhayanidhi Stalin in the lead role. The movie is directed by Arunraja Kamaraj and is gearing up for worldwide theatrical release on May 20, 2022.
The audio and trailer launch of this movie was held in Chennai, and here are some of the excerpts from the event.
Music director Dibu Ninan Thomas said, “Nenjukku Needhi is so close to my heart and the main reason is it core theme. I am very proud to be a part of this movie. The album has four songs, and the songs you all listened here are penned by Yugabharathi. To have him as a lyricist for this movie is a boon as his lines were so deep and intense. I thank the press and media for being a great support from my first movie. I thank Boney Kapoor sir, Romeo Pictures Rahul, Udhayanidhi sir. I glad that Sivakarthikeyan is here as special guest, and I am always supported by him. I request everyone to support this album and appreciate if you all like this song.”
Cinematographer Dinesh Krishnan said, “This is my second movie with Arunraja Kamaraj after Kanaa. Since, the movie has an intense premise; we had to face challenges involving timing and locations. I am so excited to see Udhayanidhi sir as police officer on the big screens. I request everyone to support this movie, which is releasing on May 20.”
Art Director Vinod said, “I had a great experience while working in the film Nenjukku Needhi. The songs have turned out to be very good. The entire team was supportive and friendly. I request everyone to watch this movie in the theaters and extend your support.”
Choreographer Leelavathi said, “This is my debut movie as choreographer. I thank Rahul sir for giving an opportunity in this movie. I would like to thank Arun sir. It’s not an easy decision for a filmmaker to give chance for a new choreographer in their respective movie. However, he gave me complete freedom, which helped me a lot. Huge thanks to Udhayanidhi sir. I have already worked with him for few songs when I worked as assistant to choreographer Brindha master. Usually, it would be jovial to interact with Udhayanidhi sir in previous movies, but this time, it was really different as he looks someone more powerful for he got into the skin of his character. I thank DOP Dinesh sir for being completely supportive.
Stunt Master Stunner Sam said, “I thank Arunraja sir, Udhayanidhi sir, Rahul sir and Boney Kapoor sir for giving me a chance to be a part of this movie. “Everyone is born equal” and this movie will impart this message with so much of intensity. I thank the entire cast and technical crew for being a complete support for me during the shoot.”
Lyricist Yugabharathi said, “This is the first-ever time, Udhayanidhi sir has played lead role in a sensitive social issue based movie. Arunraja Kamaraj himself is a good lyricist, and I was surprised when he wanted me to write lyrics for this movie. We have done a folk song, and Dibu has given an extraordinary music to it. The movie will be definitely liked by everyone.”
Actress Shivani Rajashekar said, “I am really nervous to be here amidst the great icons of Tamil cinema. When I got to know that Article 15 is getting remade in Tamil, I requested Arun sir to audition me and make me a part of this project, if he is convinced with my performance. I was really happy when he chose me to be a part of this movie. I was initially very thoughtful on how Udhayanidhi would treat me on the sets, and he was friendly throughout the shoot. I thank Boney sir, Rahul sir for making me a part of this movie. I thank the entire crew for being so kind and supportive for me.”
Tanya Ravichandran said, “I thank producer Boney Kapoor sir, Rahul sir, Udhayanidhi sir for giving a chance to be a part of this movie. I thank the entire cast and crew for being a great support.”
Director Magizh Thirumeni said, “I have a journey of past 4-5 years with Udhayanidhi sir, and he has been a great human, who treats everyone equally on the sets and anywhere in the public. And so happens to be the protagonist in the Nenjukku Needhi. This is the reason, why this role is very well presented by Udhayanidhi as his real life nature intersects very well with the character in this movie. I would like to tell Arunraja Kamaraj that everyone Udhayanidhi sir comes to our shooting from your sets, he is high-spirited and highly energetic. This itself is the success of your movie. I am sure Nenjukku Needhi will be a great movie that has outstanding dialogues and wonderful making.”
Producer Anbuchezhian said, “Udhayanidhi sir always know the success formula, right from his debut movie itself. Nenjukku Needhi is going to be a very special movie. The dialogues and the complete movie are very powerful. I congratulate Boney sir for remaking a very good movie. I wish Rahul for materializing this project efficiently. I wish grand success for the entire cast and crew.”
Producer Sathya Jyothi Thyagarajan said, “I have always liked the movies of Udhayanidhi movies as his roles would be more like boy-to-next door. He has always excelled in humour scripts, and this one, he has surprised me with his police role. I have followed him from his childhood, and it’s great to see his youthfulness. I wish the entire team for the grand success of this movie.”
Actor-Director RJ Balaji said, “There was an incident in my life that personally impacted me a lot. During the time, when Rajini sir’s Kabali was released, I was shooting in a place, where I came across few youngsters and asked them if they watched the movie. But they surprised me with a reply stating that they wouldn’t watch the movie made by that particular filmmaker. Caste issues are still predominantly prevailing in many parts of Tamil Nadu. When movies like Nenjukku Needhi are getting released frequently, this will fade away. Tamil Nadu has progressed a lot because of Kalaignar Karunanidhi. He was known for his hard work and approachability. It has been passed through genes for Udhayanidhi as well. During the same date (May 7) last year, where he had to take oath for his cabinet ministry, I had serious issues of my friend prone to critical situation of a boy, who was suffering from COVID. He was newly married and the situation was too bleak. In spite of such a busy and important day, both Udhayanidhi and Kiruthiga made sure that the boy got proper treatment. Nenjukku Needhi will be a groundbreaking movie in the Tamil movie industry. I wish great success to the entire team.”
Producer Boney Kapoor said, “I thank Udhayanidhi Stalin for accepting this movie. Rahul has been a great support in nurturing this project. Yes, the film is a remake of Article 15, but the way Arunraja Kamaraj has captured the nativity of Tamil Nadu and has completely modified it is extraordinary. I have seen the movie couple of times, and I am really happy about the way, the movie is shaped. When the teaser of this movie was released, I was so much glad to hear my daughters saying that the movie looks so great than the original version of Article 15. Rahul deserves special applause for a great support. I am sure this movie will be liked by all the audiences.”
Actor Sivakarthikeyan said, “During the pre-release of Don, Udhayanidhi sir told that I am the Don of Tamil cinema, but to be honest, he is the one. Don has various synonymous definitions. The one with weapons can be called as ‘Don’ and even the ones with ‘Bravery in Heart’ too. He has been consistently promoting our film ‘Don’ in various aspects. Udhay sir’s down-to-earth nature is really amazing. I am still wondering how he is able to balance many works at the same time. My friend Arun Raja Kamaraj has always aspired to make good movies. I was going through one of the YouTube comments for the film’s teaser, where someone mentioned ‘The frames in this movie are more like Zack Snyder, the famous Hollywood director. I am glad that Arun has made a great movie. Now I request him to write a good script for me. I always have a fear in being a part of remake movies, but after watching the trailer of this movie, I have got good confidence and input to take in. Arun raja has gone through a terrible loss in his life. Every time, there is an event involving us, his wife would get ready first. He has incurred a great loss, but hereafter, his life will be filled with only happiness. I wish grand success for the entire team.”
Cabinet Minister-Politician Anbil Mahesh said, “I am in no way related to this movie like other actors and technicians, but I am somewhat related to Udhayanidhi here. This is such a greater moment for me. Udhayanidhi has a great heart and the humanity in him has made the entire Tamil Nadu believe in him. I am sure this movie is going to be a big hit. I wish the entire team for the great success of this movie.”
Actor Udhayanidhi Stalin said, “It was a surprise call from Boney Kapoor sir as he usually makes movies with Thala (Ajith Kumar). During our first meeting, we interacted a lot, where sir informed me that he has got three remake projects in hand among which couple of them were comedy capers. I told him that I am bored playing the same routine roles, and I chose to be a part of Article 15. Choosing director for this movie was a big task. I got to watch Kanaa, and saw a particular shot that had ‘Periyar’ Ayya photo in the backdrop. So I had a clarity that Arunraja is going to be the director of this film. He has incurred a heavy loss. His wife Sindhu was actively working during the first schedule like an assistant director. Her demise is completely unacceptable. We lost nearly 2-3 crewmembers due to pandemic crisis. This movie is going to be really special for everyone. This film is based on an incident that happened in Madhya Pradesh. Even today, there are many problems in Uttar Pradesh, and the state is 30 years behind Tamil Nadu. It’s all because of Tamil Dravida Iyakkam. I am sure that Arun will reach greater heights like Sivakarthikeyan said now. He is a strict director. He would keep smiling, but wouldn’t compromise even for a single shot. Choreographer Leela accepted to be a part of this project only after clearly asking if I have got any dance sequence (On a jocular statement). Art director Vinoth has done a great job of erecting a village set work so efficiently. Cinematographer Dinesh has been proficient. He is genius, where he shot the sunset as sunrise sequence. He was so supportive throughout the movie. I was initially doubtful if I can carry out the role of police officer efficiently. I thank the entire team for shaping me in this good role. In particular, Dinesh has molded me so much perfectly. Music director Dibu has done a marvelous job, and I appreciated him at the time of teaser release itself. This is a movie that will have an issue that is so relevant, and I hope it will be liked by audiences. I thank Boney sir for believing in me and making me a part of this project.”
நெஞ்சுக்கு நீதி திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயலர் வெளியீட்டு விழா இன்று திரைபிரபலங்கள்,
படக்குழுவினர் கலந்து கொள்ள கோலகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் கூறியதாவது…
நெஞ்சுக்கு நீதி அனைவரும் பார்க்க வேண்டிய படம், இந்த படத்தில் வேலை பார்த்தது பெருமை. படத்தில் நான்கு பாடல்கள். யுகபாரதி ஆழமான வரிகளை கொடுத்துள்ளார், அதற்கு நன்றி. இது எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படத்தில் பல விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம். என்னுடைய பாடல்களுக்கு நீங்கள் எப்போதும் வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த, அருண்ராஜாவிற்கு நன்றி. தயாரிப்பாளர் போனிகபூர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உதயநிதி சார் அவர்களுக்கு நன்றி. ஆயிரம் பொறுப்புகள் இருந்தாலும் உதயநிதி கூலாக இருக்கிறார். படத்தின் பேக்ரவுண்ட் பணிகள் போய்கொண்டிருக்கிறது. படம் நன்றாக வந்துள்ளது. படத்தில் தொழில்நுட்ப குழு சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். எல்லோருக்கும் நன்றி. இது என்னுடைய 5 வது படம், எனக்கு மகிழ்ச்சி. எனது நண்பர் சிவாவிற்கு நன்றி. பாடல் பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள். நன்றி.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் B கூறியதாவது…
இந்த படத்தில் உதயநிதி சார் காவல்துறை அதிகாரியாக வந்திருக்கிறார், அது பார்ப்பதற்கு கம்பீரமாக உள்ளது. எல்லோருக்கும் நன்றி, எல்லோரும் ஆதரவு தர வேண்டும். “
கலை இயக்குனர் வினோத் ராஜ்குமார் கூறியதாவது…
இந்த படம் சமூகநீதி பற்றி பேசும் படம், இந்த படத்தில் வேலை பார்த்தது பெரிய அனுபவம். இந்த படத்தில் பாடல்கள் அருமையாக வந்துள்ளது. இந்த படக்குழு அருமையான குழு. படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.
நடன இயக்குனர் லீலாவதி கூறியதாவது…
இது எனது முதல் படம். ராகுல் சாருக்கும், அருண் சாருக்கும் நன்றி. புது நடன இயக்குனருக்கு வாய்ப்பளிப்பது பெரிய விஷயம். அவர் வேலை பார்க்கும் போது முழு சுதந்திரம் கொடுப்பார். உதயநிதி அவர்களுக்கு நன்றி. அவருடன் பல படம் அசிஸ்டண்டாக வேலை பார்த்திருக்கிறேன். காவல் உடையில் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தார், அவர் அருகில் போவதற்கே ஒரு தயக்கம் இருந்தது. படத்தில் ஒரு கூத்து கலை வருகிறது. தமிழகத்தின் கூத்து கலைஞர்களை படத்தில் பயன்படுத்தியுள்ளோம். அவர்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். படம் ஒரு கூட்டு முயற்சி. படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.
வசனகர்த்தா தமிழரசன் கூறியதாவது…
இது எனது முதல் மேடை. இயக்குனருக்கு நன்றி. நான் சினிமா கனவை விடலாம் என்று இருந்த போது, எனக்கு மீண்டும் வாய்ப்பளித்தது அருண் சார் தான். சென்னையில் எனக்கு அடையாளம் அவர்
தான். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். படக்குழு அனைவருக்கும் நன்றி. உதயநிதி சாருக்கு நன்றி. படத்தை நீங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள், ஆதரவு தாருங்கள், நன்றி”
சண்டை இயக்குனர் ஸ்டன்னர் சாம் கூறியதாவது…
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த, இயக்குனர், தயாரிப்பாளர், உதயநிதி சாருக்கு, மற்றும் படக்குழுக்கு நன்றி. இந்த படத்தில் அனைவரும் சமம் என்று மிகப்பெரிய விசயத்தை பேசியுள்ளோம். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.”
பாடலாசிரியர் யுகபாரதி கூறியதாவது,
இந்த படம் முழுக்க முழுக்க உதயநிதி நடித்த முதல் முழு அரசியல் திரைப்படம். ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக். அது அனைவரும் சமம் என்ற சட்ட பிரிவு, இது அம்பேத்கர் எழுதிய சட்டம். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பல பாடல்களை எழுதியுள்ளார், என்னை அவர் கூப்பிட்டது எனக்கு ஆச்சர்யம். ஹிந்தி படத்தில் இருக்கும் அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு, அதற்காக பல மாற்றங்களை செய்துள்ளனர், அதற்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டும். படத்தில் நாட்டுபுற பாடல் ஒன்று வருகிறது. அதற்காக பெரும் உழைப்பை போட்டுள்ளனர், படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்.
நடிகை ஷிவானி ராஜசேகர் கூறியதாவது….
எல்லோருக்கும் வணக்கம். ஆர்ட்டிகள் 15 ரீமேக் பண்ண போகிறார்கள் என்றவுடன், நானே விருப்பபட்டு கேட்டு வாய்ப்பு வாங்கினேன். தயாரிப்பாளர் ராகுலுக்கு நன்றி. உதயநிதி சார் எல்லோரையும் மரியாதையுடன் நடத்துவார். மொத்த குழுவுக்கும் நன்றி. நான் மிஸ் இந்தியா போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிடுகிறேன், உங்களது ஆதரவை தாருங்கள்”
நடிகை தான்யா ரவிசந்திரன் கூறியதாவது…
இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளித்த படக்குழுவிற்கு நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்
இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதாவது…
இந்த படம் முடிந்து, எனது படத்திற்கு வரும்போதெல்லாம் உற்சாகமாக இருப்பார் உதயநிதி. ஆர்டிகள் 15 ரீமேக் பண்ண போகிறேன் என உதய் சார் சொன்ன போது, அது சரியான தேர்வு என்று நான் நினைத்தேன். அது ஆழமான அரசியல் பேசக்கூடிய படம். உதய் சார் பணிவான நபர், தன்னை அடுத்தவர் இடத்தில் வைத்து பார்ப்பவர். மிக இயல்பாக இந்த கதாபத்திரத்தில் இவர் பொருந்துவார். அருண் இயக்கபோகிறார் என்றவுடன் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. வசனங்கள் ஆழமாக இருந்தது. நடுநிலை என்பது உண்மையின் பக்கம் நிற்பது, வசனகர்த்தா தமிழரசனுக்கு தலை வணங்குகிறேன். யுகபாரதி, இசையமைப்பாளார், ஒளிப்பதிவாளர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். “
தயாரிப்பாளர் அன்புசெழியன் கூறியதாவது
“ஒரு செங்கலை வைத்து ஆட்சியை மாற்றியவர் உதய் சார், அவருக்கு சரியான படம் இது. படம் மிகப்பெரிய வெற்றியடையும். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது…
இந்த படம் சரியான தேர்வு, இயக்குனருடைய முதல் படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவர் இந்த ரீமேக்கை ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்துள்ளார். படத்தின் பாடல்கள் சிறப்பாக உள்ளது. படக்குழு மொத்த பேருக்கும் வாழ்த்துக்கள். உதயநிதி படங்கள் எதார்த்தமான ஒன்றாக இருக்கும். இந்த படத்தில் காவலாளி ரோல் சிறப்பாக செய்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்”
நடிகர் RJ பாலாஜி கூறியதாவது
“ நானும், உதயநிதியும் போனிகபூருக்கு படம் செய்துள்ளோம். எனக்கு உதயநிதியை 12 வருஷமாக தெரியும். அவருடன் பழகுவதற்கு எப்போதும் பயமாக இருந்ததில்லை. அவரை மிக எளிமையாக அணுகலாம். அவர் நிறைய உதவிகளை செய்பவர் மிக நல்ல மனிதர், அருண்ராஜா பெரிய இழப்பிற்கு பிறகு இப்படி ஒரு படம் எடுத்தது பெரிய விஷயம். சமூகத்திற்கு இந்த அரசியல் படம் மிக அவசியமான ஒன்று. இந்தியாவில் இன்னும் ஜாதி இருக்கிறது இந்த நிலையில், இப்படி ஒரு படம் அவசியமான ஒன்று, இப்படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள். படத்தை நீங்கள் தியேட்டரில் பார்த்து ஆதரவு தர வேண்டும்.
தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாவது…
நான் ஆர்டிகள் 15 படத்தை அதிகமுறை பார்த்துள்ளேன். அருண்ராஜா இந்த படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்துள்ளார். தமிழகத்தின் வாழ்வியல் நுணுக்கங்களை அவர் படத்தில் பதிவு செய்துள்ளார். ராகுலுக்கு நன்றி கூற வேண்டும். மொத்த குழுவிற்கும் பெரிய நன்றி
நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது……
“உதயநிதி சார் பல வேலைகளை பார்க்கிறார், அது அவரது குடும்ப இரத்ததிலேயே இருக்கிறது. உண்மையான டான் உதயநிதி சார் தான். இத்தனை வருட பழக்கத்தில் அவர் எனக்கு பாசிடிவிட்டியை மட்டுமே தந்துள்ளார். நெஞ்சுக்கு நீதி பவர்வுல் டைட்டில். எனக்கு ரீமேக் எடுக்க பயம், ஆனால் அருண்ராஜா இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். அருண்ராஜா எனது நண்பன் என்பது பெருமை. கனா போன்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அருண் பெரிய இழப்பில் இருந்த போது அவனுக்கு உறுதுணையாக இருந்தது உதயநிதி சார் தான். இந்த நெஞ்சுக்கு நீதி பெரிய வெற்றியடையும். யுகபாரதி, வசனகர்த்தா தமிழ், ஒளிப்பதிவாளர் தினேஷ், இசையமைப்பாளர் திபு மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போனி கபூர் சாருக்கு நன்றி.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது….
படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி. படம் பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…
முதல் நன்றி தாத்தா கலைஞருக்கு அவர் தந்தது தான் இந்த டைட்டில். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம். போனிகபூர் என்னை அழைத்து ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது., இப்படத்திற்கு யாரை இயக்குனராக வைத்து பண்ணலாம் என சந்தேகம் இருந்தது. யாரும் முன்வரவில்லை. கனா படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்ட போது, அருண் ஒத்துகொண்டார். நான் நெஞ்சுக்கு நீதி டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, பார்த்து பண்ணுங்க என கூறினார். படம் எடுக்கும் போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது. அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சமர்பணம். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். நடன இயக்குனர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் தினேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் ஒத்துகொண்ட போது பயமாக இருந்தது, எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது. நான் போலீஸாக திரையில் சிறப்பாக வந்ததற்கு பெரிய காரணம் தினேஷ். ஷிவானி ராஜசேகர், குறிஞ்சி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். பாடல்வரிகள் பவர்புல்லாக இருக்கும். இந்த படத்திற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெரிய பலம். எல்லோருக்கும் நன்றி. படம் சமூகநீதி பேசும் படம், இந்த சமயத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கு. நன்றி.
இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை அனுபவ் சின்ஹா, எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். B செய்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார், எடிட்டிங் ரூபன், கலை இயக்கம் வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி N இளையராஜா, ஸ்டன்னர் சாம் ஸ்டண்ட், C H பாலு ஸ்டில்ஸ், பாடல்கள் யுகபாரதி, அருண்ராஜா காமராஜ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளனர், லீலாவதி நடன இயக்குனர் , அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பு சுரேன் மற்றும் அழகியகூத்தன், VFX ஹரிஹர சுதன் (Lorven Studio) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
தயாரிப்பு நிர்வாகி S.P. சொக்கலிங்கம், காஸ்ட்யூமர் K.செல்வம், ஹேர் மற்றும் மேக்கப் சக்திவேல், விளம்பர வடிவமைப்புகள் கோபி பிரசன்னா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.