சினிமா பிரபலங்கள் இயக்குனர் கல்யாண், நடன இயக்குனர் சாண்டி, நடிகர் டேனியல், நடிகர் கூல் சுரேஷ், இவர்களிடம் பாராட்டு பெற்ற தூண்டுதல் பைலட் பிலிம்…
படங்களில் நடித்திருந்தாலும் இயக்குவதே எனக்கு பிடிக்கும் – தூண்டுதல் இயக்குநர் ராஜேஷ்
தூண்டுதல் குறும்பட இயக்குநர் ராஜேஷ் பேசியதாவது
நான் வடசென்னை வாசி. அடிப்படையில் நான் ஒரு டான்சர். 2007-வது ஆண்டு 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே நடனத்தில் ஆர்வம் வந்தது. பின்னர், விஜய் டிவி, வேந்தர் டிவி, ஜீ தமிழ், ஜெயா டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நடக்கும் நடன போட்டிகளில் (டான்ஸ் ரியாலிட்டி ஷோ) நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன்.
மேலும், நான் சினிமாத் துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. சினிமாவில் முதலில் இணை இயக்குனராக இருந்தேன். பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை வெளியான பெரும்பாலான படங்களுக்கு நடனத்தில் பணியாற்றியிருக்கிறேன்.
RRR படம், சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் தாய் கிழவி பாடலுக்கும் பணியாற்றியிருக்கிறேன்.
தனிப்பட்ட ஆல்பம் பாடல் இயக்கியிருக்கிறேன். பைலட் படம் இயக்கிய அனுபவத்தில் தான் தூண்டுதல் என்ற குறும்படம் இயக்கியிருக்கிறேன். இப்போது திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
கொரோனா காலத்தில் நடந்த உண்மை சம்பவம் தான் தூண்டுதல் குறும்படத்தின் கதை.
கைபேசியில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும், பெற்றோர்களின் கைபேசி குழந்தைகளை எப்படி அடிமையாக்குகிறது. அப்படி அடிமையானால் குழந்தைகளை எப்படி பாதிக்கும். அந்த பாதித்தால் என்ன நடக்கும் என்பதே இப்படத்தில் கூறியிருக்கிறேன்.
கைபேசியில் வரும் விளம்பரம் மூலமாக வரும் பிரச்சனை தான் இந்த தூண்டுதல்.
அப்பாவுக்கு தெரியாமல் கைபேசி உபயோகிக்கும் பெண்ணுக்கு நடந்த உண்மை சம்பவத்தைக் கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.
நடிகர் ஜார்ஜ் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார், கலர்ஸ் தமிழ் மற்றும் பல படங்களில் நடிக்கும் சிறுமி ஹேமா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், நடிகர் தர்ஷன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு 4 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து விட்டோம்,பின் தயாரிப்பு பணிகள் ஒரு மாதத்தில் முடித்தோம்.
இப்படத்திற்கு பட்ஜெட் அதிகம். மொத்தம் 3.5 லட்சம் ஆனது, ஆனால் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து ஊக்கப்படுத்தும் தயாரிப்பாளர் சக்தி ராமசாமி ரைட் ஸ்கிரிப்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து மிகவும் உறுதுணையாக இருந்தார்.
அதேபோல் டான் போஸ்கோ பள்ளி எங்களுக்கு படப்பிடிப்பு நடத்த இலவசமாக அனுமதி கொடுத்தார்கள்.
மகான், எங்க வீட்டு பிள்ளை, கோப்ரா போன்ற படங்களில் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றிய அருண் இப்படத்திலும் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றியிருக்கிறார். அடுத்தடுத்து எடுக்கும் படங்களிலும் இந்த குழுவே தொடர்ந்து பணியாற்றும்.
நடிகர் கமல் சாரும், இயக்குநர் செல்வராகவனும் எனக்கு முன்னோடிகள், இப்போது என்னிடம் உண்மை சம்பவம் ஒன்று உள்ளது, தயாரிப்பாளர் கிடைத்தால் படத்தை தொடங்கி விடலாம். தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் படி இயக்குவேன்.
ஓடிடி வந்தாலும் மக்கள் ஒரே இடத்தில் பார்க்கும் திரையரங்கம் தான் சிறந்தது, அப்போது தான் மக்களின் மனநிலை புரியும்.
ஜோதிகா நடித்த ஜாக்பாட், பிரபு தேவா நடித்த ஜல்ஸா படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இயக்கம் தான் பிடிக்கும்.
முன்பை விட இப்போது சினிமாவில் டெக்னாலஜி வளர்ச்சியடைந்துள்ளது. அதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது என்றார்.