Friday, November 15, 2024
Home Uncategorized Arunachalam Vaidyanathan’s ‘Shot Boot Three’ wins top award in Seoul, South...

Arunachalam Vaidyanathan’s ‘Shot Boot Three’ wins top award in Seoul, South Korea

At a time when south Indian films are rocking the Pan-Indian market, the yet to be released Tamil film “Shot Boot Three” wins the top prize at ICAFF, Seoul, South Korea. We all know that South Korean films have a great fan following in Tamil Nadu. Some of their films have even been remade into Tamil, looks like it’s time to return the favor.

It would not be an overstatement if we were to say that South Korea is the pet companion capital of the world. It gives the film producers great pride to be recognized by the International Companion Animal Film Festival, which is the first ever festival dedicated to Companion animals. It has been ongoing since 2016, and this is the first Indian film to win the top prize in this festival since its inception.

Animals are not only pets, but are now considered family or life companions, so this film festival celebrates the friendships and love we have for our “furry fellows.”

Here is the citation given by the festival committee to the director:

  1. A really great film with a wholesome and healthy story.
  2. It is refreshing to be able to witness an Indian film about children and dogs.
  3. The cinematography is excellent
  4. The theme of the movie goes well with the heart (objective, purpose) of our ICAFF film festival and it was an unanimous decision by all judges to give you this prize

The award ceremony will be held on October 7-9th. The award includes a cash prize, certificate and a trophy. Arunachalam Vaidyanathan plans to travel and receive the award in person.

Arunachalam Vaidyanathan says, “Am delighted to know from the festival director regarding the top most recognition. Shot Boot Three is a miracle unfolded in front of my eyes along with my wonderful team. We are grateful for this recognition and l sincerely thank my entire production team, cast and crew for the strong belief and conviction in this journey!’.

Shot Boot Three is an upcoming feature film starring Sneha, Venkat Prabhu, Yogi Babu, Sivaangi (Cook with Comali) and four kids along with a Golden retriever dog ‘Max’. Kailash Heet, Praniti (Super singer), Vedanth and Poovaiyar(‘Master’ fame) are the kids who play leading roles in this family friendly film. The music is composed by Veena Maestro Rajesh Vaidya, Cinematography by Sudarshan Srinivasan and Editing by Barath Vikraman. The movie’s post production is over and started to make festival rounds and first being, the above mentioned ICAFF, South Korea.

தென் கொரியாவின் சியோலில் அருணாச்சலம் வைத்யநாதனின் ‘ஷாட் பூட் த்ரீ ‘ க்கு சிறந்தத் திரைப்படத்திற்கான விருது !

தென்னிந்திய படங்கள் பான்-இந்திய சந்தையை உலுக்கி கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது தயாரிப்பு முடிந்த தமிழ்த் திரைப்படமான “ஷாட் பூட் த்ரீ” ICAFF, சியோல், தென் கொரியாவில் ஐ.சி.ஏ.எஃப். எஃப் திரைப்பட விழாவின் சிறந்த விருதை வென்றது. தென் கொரியபப் படங்களுக்கு தமிழகத்தில் அதிக ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களின் சில படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன, இது நாம் கொடுத்த ஆதரவிற்கு, அவர்கள் கொடுத்த பரிசு போலுள்ளது!

தென் கொரியா, உலகின் ‘செல்லப்பிராணிகளின் தலைநகரம் ‘என்று சொன்னால் அது மிகையாகாது. ஐ.சி,.ஏ. எஃப் .எஃப் (ICAFF) தென்கொரியாவில் துணை விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திரைப்பட திருவிழாவாகும். 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்பட விழாவில், முதன் முறை ஒரு இந்தியத் திரைப்படம் விருதை வென்றுள்ளது.
விலங்குகள் செல்லப்பிராணிகள் மட்டுமல்ல, இப்போது குடும்பம் அல்லது வாழ்க்கைத் துணையாகக் கருதப்படுகின்றன, எனவே இந்தத் திரைப்பட விழா செல்லப்பிராணிகள மேல் நாம் கொண்டுள்ள நட்பையும் அன்பையும் கொண்டாடுகிறது.

விழாக் குழுவினர், இயக்குனருக்கு எழுதிய பாராட்டு மடலில் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.

  1. மிக அற்புதமான மற்றும் ஆரோக்கியமான கதையுடன் கூடிய திரைப்படம்.
  2. குழந்தைகள் மற்றும் நாய்களைப் பற்றிய இந்தியப் படத்தைப் பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது.
  3. ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது..
  4. படத்தின் கருப்பொருள் எங்கள் ICAFF திரைப்பட விழாவின் நோக்கம் மற்றும் குறிக்கோளை மனப்பூர்வமாக பூர்த்தி செய்தது. மேலும் இந்த பரிசை உங்களுக்கு வழங்குவது என்பது அனைத்து நடுவர்களாலும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

விருது வழங்கும் விழா அக்டோபர் 7-9 தேதிகளில் நடைபெறும். “ICAFF எக்ஸலன்ஸ் விருது” பணமுடிப்பு மற்றும் ஒரு கோப்பை பரிசாக அளிக்க படுகிறது. இந்த விழாவிற்கு அருணாச்சலம் வைத்யநாதன் நேரில் சென்று பங்கு பெற உள்ளார்.
அருணாச்சலம் வைத்ய்நாதன் இது பற்றி கூறும்போது, “ICAFF திரைப்பட விழா இயக்குனர் டெபோரா பைக்கிடம் இருந்து வந்த வாழ்த்து செய்தியில் நானும், எனது குழுவும் மிக மகிழ்ச்சி அடைந்தோம். ஷாட் பூட் த்ரீ, எழுத ஆரம்பத்தில் இருந்து திரைப்படமாக எடுத்து முடிக்கும் வரை, எங்களுக்குப் பல ஆச்சர்யங்களைத் தந்துள்ளது! இந்தப் படம் வெளியாவற்கு முன்பே, எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மேலும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது!’ என்றார்.
ஷாட் பூட் த்ரீ படத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு,ஷிவாங்கி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஒரு ‘கோல்டன் ரெட்ரீவர்’ நாய் ‘மேக்ஸ்’ நடித்துள்ளனர். கைலாஷ் ஹீத், சூப்பர் சிங்கர் ப்ரணிதி, வேதாந்த் மற்றும் ‘மாஸ்டர்’ புகழ் பூவையார் ஆகியோர் இந்த குடும்பப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா இசையமைத்திருக்கிறார் ஒளிப்பதிவு சுதர்சன் சீனிவாசன், படத்தொகுப்பு பரத் விக்ரமன். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முடிந்த உடன் கிடைத்திருக்கும் இந்த விருது, படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments