Press announcement:
September 7, 2022: Turmeric Media, the company with more than
2 decades of experience in the field of movie production is
collaborating with Aha Tamil the popular Tamil OTT platform owned by Prominent Telugu Movie Producer Mr. Allu Aravind, for an untitled film based on a short story written by
legendary Tamil Author Jeyamohan.
The film will be directed by Mr. Rafiq Ismail, the movie is adapted from the short story ‘Kaithigal’ from the book titled ‘VENKADAL’.
A great deal of time and effort has been spent on crafting the screenplay that would enhance Mr.Jeyamohan’s original story.
The screenplay has been meticulously scripted to effectively convey the emotion.
This collaboration marks Turmeric Media and Aha Tamil debut foray into film production for over-the-top streaming
platform. The film is produced by distinguished producer
Mrs. Anitha Mahendran, proprietor Turmeric Media.
The film’s title, cast & crew will be revealed soon.
Mr. Ajit Thakur, CEO aha says:
“We believe in the power of stories that travel and
constantly looking for great subjects that we can bring to the audience. Turmeric Media is one of the most creative voices in Tamil Nadu, and they are also a powerhouse studio with their unique and ingenious storytelling style.
We are excited to collaborate with them to translate
legendary Tamil author Mr Jeyamohan’s work into an Original Film. We are sure this will turn into superlative
entertainment to aha viewers.”
Mrs. Anitha Mahendran, Turmeric Media says:
“Immensely proud to join hands with Mr. Allu Aravind,
Veteran Movie Producer & AHA Promoter, who has made AHA Telugu’s No.1 Streaming platform amidst the global players with more than 2 million subscribers and wish to replicate the same success in AHA Tamil.
It’s a great privilege to translate legendary Tamil author
Mr.Jeyamohan’s work into an Original Film For Aha”. We at
Turmeric media believe in converting creative passion into commercial success without any compromise. This film will portray 100% uniqueness and is inspired on the lives of local Tamil people living upon the content philosophy of Aha.”
டர்மெரிக் மீடியா மற்றும் ஆஹா ஓடிடி இணைந்து
தயாரிக்கும் புதிய திரைப்படம்!
செய்திக்குறிப்பு:
7, செப்டம்பர்; 2022
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் திரு.அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய
திரைப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாக இன்று அறிவித்துள்ளார்கள்.
இந்தத் திரைப்படம் புகழ்பெற்ற, மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிய ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது. திரு. ரஃபீக் இஸ்மாயில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும், ரசனைக்கும் ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக திரு. ஜெயமோகன் அவர்களின் மூலக்கதைக்கு ஈடுகொடுக்கக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் மிகுந்த கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். இத்திரைப்படத்தை டர்மெரிக் மீடியா
திருமதி.அனிதா மகேந்திரன்; தயாரிக்கிறார்.
திரு.அஜித் தாக்கூர், தலைமை நிர்வாக அதிகாரி, ஆஹா ஒடிடி,
கூறியதாவது:
“மிக நேர்த்தியான கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள், உறுதியாக பார்வையாளர்களின் உள்ளத்தை சென்றடையும், இக்கோட்பாடை உண்மையாக்கும் வகையில் செயல்பட்டுவரும்
தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா உடன் கரம் கோர்ப்பதில் நாங்கள் பெருமிதம்
கொள்கிறோம், மேலும் சிறப்புமிக்க தனித்தன்மை வாய்ந்த திரைப்படங்கள் தயாரிப்பதை தங்கள் பாணியாக கொண்ட டர்மெரிக் மீடியாவும் நாங்களும் சேர்ந்தது, மிகச்சிறந்த எழுத்தாளரான
திரு. ஜெயமோகன் அவர்களுடைய படைப்பை தழுவிய திரைப்படத்தை, ஆஹா ஓடிடி ஒரிஜினலில் வெளியிட நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இத்திரைப்படம் ஆஹா ஒடிடி நேயர்களுக்கு ஒரு மிக தரமான படமாக அமையும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் .”
தயாரிப்பாளர் திருமதி. அனிதா மகேந்திரன், டர்மெரிக் மீடியா,
கூறியதாவது:
“அனைத்து தரப்பு மக்களை மகிழ்விக்கும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள்,வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களை வழங்கும் ஆஹா தமிழ் ஓடிடி, 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது.அந்நிறுவனத்தின் அமைப்பாளரும் தெலுங்கு திரைப்படத்துறை மூத்த தயாரிப்பாளருமான திரு.அல்லு அரவிந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.டர்மெரிக் மீடியா படைப்பூக்கத்தை தரமான, வெற்றிகரமான திரைப்படமாக மாற்ற முடியுமென்பதில் சமரசமற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்தப் படமும் ரசிகர்களை மகிழ்விக்கும் படமாக அமையுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்.”