டிமான்டி காலனி. இமைக்கா நொடிகள் ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கோப்ரா. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
உலக அளவில் மிகப்பெரிய பெய்டு கில்லராக வலம் வருகிறார் விக்ரம். கணிதத்தை பயன்படுத்தி அவர் செய்யும் கொலைகளை உலக அளவில் எந்த காவல்துறையாலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில். விக்ரம் செய்யும் கொலைகளை துப்பறிந்து கண்டுபிடிப்பதற்காக ஸ்பெஷல் இன்டர்போல் ஆபீசராக களமிறக்கப்படுகிறார் இர்பான் பதான்.
இர்பான் பதான் விக்ரமை கண்டுபிடித்தாரா?, இர்பான் பதானிடமிருந்து விக்ரம் தப்பித்தாரா என்பதே படத்தின் கதை.
பொதுவாக விக்ரம் படங்களில் முழுக்க முழுக்க வியாபித்திருப்பது விக்ரமின் வழக்கம் இதிலும் அதே தான் நடந்திருக்கிறது. இர்பான் பதான் போடும் பந்துகளை சிக்ஸர்களாக விளாசித் தள்ளுகிறார் விக்ரம். போலீஸ் விசாரணை காட்சியில் விக்ரமின் நடிப்பு தியேட்டர் அதிரும் அளவுக்கு கைதட்டல்களை அள்ளுகிறது. கேஜிஎஃப் படத்தின் நாயகியான ஸ்ரீநிதி சிட்டி, இப்படத்தில் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய மற்றொரு பகுதி விக்ரமின் இளம்வயது கதாபாத்திரம். கதாபாத்திரம் மட்டுமல்லாமல் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சர்ஜன் காலித்தின் நடிபுப்ம் அபாரம். கொடூர வில்லனாக நடித்திருக்கும் ரோஷன் மேத்திவ் மிரட்டியிருக்கிறார். இவர்கள் தவிர சிறிய பாத்திரங்களில் நடித்திருக்கும் மிருணாளினி ரவி, ரோபோ சங்கர், மியா ஜார்ஜ் ஆனந்தராஜ் ஆகியோரின் பாத்திரங்களும் மனதில் பதிகின்றது.
வித்தியாசமான கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வரும் அஜய் ஞானமுத்து தேர்ந்தெடுத்திருக்கும் இக்கதைக்களமும் மிக வித்தியாசமானதாக மட்டுமல்லாமல், சிறந்த கதைக்களமாக அமைந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.
திரைக்கதை மற்றும் வசனங்கள் என அனைத்திலும் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் அஜய் ஞானமுத்து.
கொலைகள் மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கு இடையேயான பிணைப்பு தமிழ் திரையுலகிற்கு மிகவும் புதிது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் மற்றும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. திலீப் சுப்பராயன் மாஸ்டரின் சண்டைக்காட்சிகள் உலகத் தரத்தில் இருக்கிறது. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகிய இரண்டும் படத்திற்கு மிகப்பெரிய முதுகெழும்பாக அமைந்துள்ளது. உலக தரத்திலான ஒரு வித்தியாசமான ஃபிக்ஸன் கதையாக வெளியாகியுள்ளது கோப்ரா.
கோப்ரா கோலாகலம்