Thursday, December 5, 2024
Home Uncategorized Colors Tamil Presents the World Television Premiere of Thaen this weekend

Colors Tamil Presents the World Television Premiere of Thaen this weekend

Catch the blockbuster premiere this Sunday, 13th March at 5:30 PM only on Colors Tamil

Chennai, 10th March 2022: Colors Tamil, the fastest growing Tamil GEC channel gears up to entice the audience with a visual treat by presenting the world television premiere of the blockbuster movie Thaen this Sunday, 13th March at 5:30 PM as part of its Sunday Cine Jumbo. Written and Directed by the popular director, Ganesh Vinayakan, Thaen is a 2021 drama film starring Tharun Kumar and Abarnathi in the lead roles and Aruldoss and Bava Lakshmanan in supporting roles. Tune into Colors Tamil, this Sunday 13th March at 5:30pm to watch a critically acclaimed film revolving around an intriguing thread of an uneducated rural beekeeper fighting the harsh reality that life throws upon him.

Packed with hard-hitting emotions, Thaen is an adaptation of a real-life incident that narrates the story of Velu (played by Tharun Kumar), a young uneducated beekeeper and an economically backward husband who encounters the death of his wife Poongodi (played by Abarnathi) diagnosed with a rare disease. The dark emotions come into play when Velu carries his dead wife to the cremation ground as he was unable to pay for the mortuary van. This brings forth the plight of the people belonging to the tribal community in the forest areas who are inaccessible to the services, which others enjoy. The gut-wrenching tragic story of a loving family, who succumb to life’s hardest challenges, is sure to be worth the watch.

Commenting on the occasion, Director Ganesh Vinayakan said, “I was inspired to create Thaen as I wanted to bring to light the real-life story of the Muthuvan tribes of Tamil Nadu who faced a similar episode as showcased in the movie. With this story, I wanted to create awareness among the audiences on the predicaments of the economically backward sections of the society. I am glad that my film is airing on Colors Tamil, a channel that proposes to create impacting stories for its viewers.”

Commenting on the occasion, Actor Tharun Kumar said, “I am excited that Thaen will be airing on a popular channel like Colors Tamil. It is an engaging movie which encompasses the dire social and political issues of the current times. With an engaging thread and powerful drama, I am certain that this would be a great weekend watch for the audience.”

Don’t forget to tune in to Colors Tamil on Sunday, March 13th at 5:30 pm, to watch Velu’s invincible attempts to take his dead wife to the cremation ground despite all odds. Colors Tamil is available on all leading cable networks and DTH platforms – Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553).

கலர்ஸ் தமிழில் ‘தேன்’ திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியர்!
சிறப்பான பாராட்டு பெற்ற இத்திரைப்படத்தினை வரும் ஞாயிறு, மார்ச் 13 மாலை 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்

சென்னை, 10 மார்ச் 2022, தமிழ் பொது பொழுதுபோக்கு தளத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் சேனல் என்ற பெயர் பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், அதன் சண்டே சினி ஜம்போ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வரும் ஞாயிறு மார்ச் 13 அன்று மாலை 5.30 மணிக்கு பரவலான வரவேற்பை பெற்ற தேன் திரைப்படத்தின் உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்புவதன் மூலம் பார்வையாளர்களுக்கு திரைவிருந்தைப் படைக்க தயாராக இருக்கிறது. பிரபல இயக்குனர் கணேஷ் விநாயகன் எழுதி, இயக்கி 2021 – ல் வெளிவந்த சிறப்பான கதைக்களம் கொண்ட தேன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக தருண் குமார் மற்றும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ புகழ் அபர்னதி நடித்திருக்கின்றனர். சிறப்பான நடிகர்களாக அறியப்படும் அருள்தாஸ் மற்றும் பவா லட்சுமணன் துணைக் கதாபாத்திரங்களாக இதில் இடம்பெறுகின்றனர். தேனீ வளர்ப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த, கல்வி கற்காத ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் அவர் மீது இந்த சமுதாயம் சுமத்துகின்ற சுமைகளையும், பிரச்சனைகளையும் அவர் எப்படி எதிர்த்து போராடுகிறார் என்ற கருப்பொருளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் இத்திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இச்சிறப்பான திரைக்காவியத்தை கண்டு ரசிக்க மார்ச் 13 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

அழுத்தமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தேன் திரைப்படம், ஒரு நிஜவாழ்க்கை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தேனீ வளர்ப்பை தொழிலாக கொண்ட கல்வியறிவில்லாத ஒரு இளைஞனும், ஒரு அரிதான நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அவரது மனைவி பூங்கொடியின் (அபர்னதி நடிப்பில்) இறப்பை எதிர்கொள்கின்ற, பொருளாதார ரீதியில் பின்னடைவில் இருக்கின்ற ஒரு கணவனுமான வேலுவின் (தருண்குமாரின் நடிப்பில்) கதையை இது சித்தரிக்கிறது. அவரது இறந்த மனைவியின் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல வேலு முனைகிறபோது அமரர் வாகனத்திற்கான பணத்தைச் செலுத்த அவரால் இயலாத நிலையில் எழும் உணர்வுகளின் கொந்தளிப்பு மிகச்சிறப்பாக இதில் காட்டப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை பிறர் பெற்றும் அனுபவிக்கும் நிலையில், அவைகளை பெற இயலாத சூழலில் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் படும் துயரங்களையும், வேதனைகளையும் இது யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது. அன்பை அடித்தளமாக கொண்டு வாழ்கின்ற ஒரு குடும்பம், வாழ்க்கையின் மிகக்கடுமையான சவால்களுக்கு பலியாகின்ற, மனதைப் பிழியும் இந்த சோகமான கதை, பார்ப்பதற்கும், சிந்தித்து செயல்படுவதற்கும் உரிய ஒரு சிறப்பான திரைப்படம் என்பது நிச்சயம்.

தொலைக்கட்சி ப்ரீமியர் நிகழ்வு பற்றி பேசிய இயக்குனர் கணேஷ் விநாயகன் கூறியதாவது: “திரைப்படத்தில் காட்டப்பட்டவாறு அதே மாதிரியான நிகழ்வுகளை நிஜத்தில் எதிர்கொண்ட தமிழ்நாட்டின் முத்துவன் பழங்குடியினரின் நிஜ வாழ்க்கை கதையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பியதால், தேன் என்ற கதையை எழுதி அதை நான் திரைப்படமாக இயக்கினேன். இக்கதையின் மூலம், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் பிரிவினரின் சோதனைகளையும், துயரங்களையும், போராட்டங்களையும் குறித்து பார்வையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க நான் விரும்பினேன். தனது ரசிகர்களுக்கு ஆக்கப்பூர்வ தாக்கங்களை உருவாக்குகின்ற கதைகளையும், திரைப்படங்களையும் ஊக்குவிக்கின்ற ஒரு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் எனது திரைப்படம் ஒளிபரப்பாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.”

இது குறித்து நடிகர் தருண் குமார் பேசுகையில், “கலர்ஸ் தமிழ் போன்ற தமிழகத்தின் பிரபலமான சேனலில் தேன் திரைப்படம் ஒளிபரப்பாவது எனக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது. நாம் வாழும் தற்போதைய காலகட்டங்களில் நிலவுகின்ற சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை அலசுகின்ற, மக்கள் கவனத்தை ஈர்க்கின்ற ஒரு அற்புதமான திரைப்படம் இது. சக்தி வாய்ந்த கதைக்களத்தையும், மனதை நெருடும் நிகழ்வுகளையும் கொண்டிருக்கும் இத்திரைப்படம், பார்வையாளர்கள் தவறவிடாமல் பார்க்க வேண்டிய நிகழ்வாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

அனைத்து தடைகளையும், சிரமங்களையும் மீறி உயிரிழந்த தனது மனைவியின் உடலை எடுத்துச்செல்ல வேலு மேற்கொள்ளும் மனம் தளராத முயற்சிகளைக் காண மார்ச் 13, ஞாயிறன்று மாலை 5:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்ய மறந்துவிடாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments