Friday, November 15, 2024
Home Uncategorized பொய்க்கால் குதிரை விமர்சனம்

பொய்க்கால் குதிரை விமர்சனம்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, இரண்டாம் குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி, ஜான் கொக்கன், பிரகாஷ்ராஜ், ரைசா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பொய்க்கால் குதிரை.

சமீபகாலத்தில் வெளியான சிறிய பட்ஜெட் படங்கள்ளிலேயே சிறந்த படம் என பாராட்டப்பட்டு வருகிறது பொய்க்கால் குதிரை. பிரபுதேவா என்றாலே நடனம் என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு காலை இழந்தவர் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு விபத்தின் தன் மனைவியையும், தன்னுடைய ஒரு காலையும் இழக்கும் பிரபுதேவா, தன் மகளுக்காகவே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் மகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய மிகப்பெரிய தொகை தேவை என்ற நிலை ஏற்படுகிறது. பணத்துக்காக வரலட்சுமியின் மகளை கடத்த திட்டம் போடுகிறார் பிரபுதேவா. பிரபுதேவாவின் திட்டத்தை வரலட்சுமி முறியடித்துவிட்டாலும், வேறு ஒரு கும்பல் வரலட்சுமியின் மகளை கடத்திவிடுகிறது. இக்கட்டான நிலையில் இருக்கும் பிரபுதேவா என்ன செய்தார் என்பதே இப்படத்தின் கதை.

சந்தோஷ் பி ஜெயக்குமார் என்றாலே இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து போனால் ஏமாந்து போவீர்கள். ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுக்கும். பாடல், டான்ஸ், சண்டை காட்சிகள் என அனைத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார் இயக்குனர். பிரபுதேவாவின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு முக்கிய இடத்தை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. வரலட்சுமி சரத்குமாருக்கு மிகச்சிறந்த வேடம், அதே போல் அவர் கணவராக வரும் ஜான் கொக்கனின் வேடமும் சிறப்பு அவருடைய நடிப்பும் சிறப்பு

அப்பா மகளுக்கு இடையேயான பாசம், மகளுக்கு உடல்நிலை சரியில்லை என பிரபுதேவா காட்டும் சோகம் என படம் மிக அழுத்தமாக இருக்கிறது. படத்தொகுப்பு, கேமிரா, இசை என அதைத்து டெக்னிக்கல் விசயங்களும் படத்தும் பலம் சேர்க்கின்றன.

பொய்க்கால் குதிரை பறக்குது பாய்ச்சலில்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments