Tuesday, December 3, 2024
Home Uncategorized Dhanush starrer “Maaran” becomes the first-ever trailer in the Tamil movie industry...

Dhanush starrer “Maaran” becomes the first-ever trailer in the Tamil movie industry to be released by fans

Sathya Jyothi Films presents “Maaran” starring National award-winning actor Dhanush, directed by Karthick Naren has created a new benchmark in the Tamil movie industry. The trailer of this movie has been unveiled by the fans and audiences, which makes it the first-ever Tamil movie with this pioneering concept.

It has been a routine ritual, where the first look, visual promos of leading Tamil actors would be revealed by the eminent personalities of the film industry. However, Dhanush starrer “Maaran” spearheads this new-fangled concept of endowing the fans and audiences to become celebrities and unveil the trailer by using a new feature called ‘Twitter Unlock’ on Twitter. The diehard fans of Dhanush and general audiences together have released this trailer. 

With this new-dimensional bonanza bringing fans and audiences under the spotlight, they are filled with extreme happiness and are celebrating this trailer. The trailer is now streaming on the Disney Plus Hotstar YouTube channel as well.

Maaran is presented by Sathya Jyothi Films T.G. Thyagarajan and is produced by Sendhil Thyagarajan and Arjun Thyagarajan. The film is co-produced by G. Saravanan and Sai Siddharth. The film is directed by Karthick Naren and features a musical score by G.V. Prakash Kumar. Malavika Mohanan is playing the female lead role. The others in the star cast include Samuthirakani, Krishna Kumar, Master Mahendran, Jayaprakash, Aadukalam Narain, and many leading actors from the film industry. The screenplay is written by Karthick Naren along with eminent writers Suhas and Sharfu. The film is premiering on Disney Plus Hotstar from March 11, 2022, onwards.

தமிழ் திரையுலகில் முதல் முறையாக, ரசிகர்கள் வெளியிட்ட “மாறன்” பட டிரெய்லர் !

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் பெருமைமிகு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” படத்தின் டிரெய்லரை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும், ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன் படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.  டிவிட்டரின் இந்த புதிய வசதியான Twitter Unlock மூலம்,  நடிகர் தனுஷ் உடைய தீவிர ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து ஒன்றிணைந்து, இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். 

இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக “மாறன்” திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் இந்த புதிய அனுபவத்தால் மிகப்பெரும் உற்சாகத்துடன் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். மாறன் டிரெய்லர் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் அதன் அதிகரப்பூர்வ YouTube பக்கத்திலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மாறன் டிரெய்லர் இணையெங்கும் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. 

“மாறன்” திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் TG தியாகராஜன் வழங்குகிறார், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இந்த படத்தை G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத்தயாரிப்பு செய்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம்  பிரத்யேகமாக வெளியாகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments