தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கவனத்திற்கு சங்க செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலௌ உள்ள உறுப்பினர்கள் தங்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு தேவையான துணை நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள நடிகை ,நடிகர்களை நடிப்பதற்க்காக கட்டாயம் அழைத்து பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என ஏக மனதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் திர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தொடர்ந்து பல நாட்களாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உள்ள தலைவர் நடிகர் நாசர் செயலாளர் நடிகர் விஷால் பொருளாளர் நடிகர் கார்த்தி துணை தலைவர்கள் S பூச்சி முருகன் கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமன செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் கோரிக்கையினை ஏற்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள நடிகர்களை கட்டாயம் திரைப்படங்களில் நடிக்க பயன்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர் ,நடிகைகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர் .
அன்புடன்
வி.கே.வாசுதேவன்
தென்னிந்திய நடிகர் சங்கம் செயற்குழு உறுப்பினர்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றம்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on