Thursday, September 19, 2024
Home Reviews வலிமை விமர்சனம்

வலிமை விமர்சனம்

போதைக்கடத்தல், வழிப்பறி நகைக்கடத்தல் என சென்னையை கலக்கிவரும் பைக்கர் கேங்கை விரட்டிப்பிடிக்கும் ஒரு காவல்துறை அதிகாரியாக அஜீத் நடித்திருக்கும் படம்
வலிமை

வலிமை படத்தின் ஆகப்பெரிய பலம் அஜீத் மற்றும் அஜீத் ஒன்லி. ஃபிட்டான உடலுடன், தன்னுடைய வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மாற்றி
இளமை ததும்ப நடித்திருக்கிறார் அஜீத். நரைத்த முடி, வெள்ளை தாடியுடன் வந்தாலே கொண்டாடும் அவர் ரசிகர்களுக்கு இப்படி ஒரு லுக்கில் வந்தால் சும்மா இருப்பார்களா?
தியேட்டர்களில் கொண்டாடி தீர்க்கிறார்கள்.

அதிரடியான ஆக்சன் படம் என்றாலும் படம் முழுக்க அம்மா செண்டிமெண்ட், தம்பி செண்டிமெண்ட் என இருப்பது அஜீத் ரசிகர்களை தாண்டி குடும்ப ஆடியன்ஸ்சை
தியேட்டருக்கு வரவைக்கும் என்பது உண்மைதான், ஆனால் இந்த மாதிரியான அதிரடி படங்களுக்கு அளவுக்கு அதிகமான அம்மா செண்டிமெண்ட் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது.

இதுவரை இந்தியாவில் வெளியான படங்களிலேயே இப்படி ஒரு பைக் சண்டை காட்சிகள் இல்லை என்பது நூறு சதவீதம் உண்மை, இடைவேளைக்கு முன்பும், இடைவேளை முடிந்த பின்பும் வரும்
பைக் காட்சிகள் நம்மை சீட் நுனிக்கு கொண்டுவருகிறது. இப்படி ஒரு பைக் சேசிங் காட்சியில் நடிக்க அஜீத் அவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது இருநூறு சதவீதம் உண்மை.

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவில் பைக்சேசிங் காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன, 1000 சிசி பைக் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறப்பான படத்தொகுப்பு என டெக்னிக்கல்
விசயங்கள் பக்காவாக இருக்கின்றன. யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான் என இரண்டு பெரிய இசையமைப்பாளர்கள் இருந்தும் பெரிதாக கவரவில்லை.

வில்லன் காதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலிமையாக காட்டி இருக்கலாம், செண்டிமெண்ட் காட்சிகள் மற்றும் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

வலிமை அஜீத் ஷோ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments