Actor Manikandan, who is riding high on the success of back-to-back films: Good Night and Lover, is gearing up for his hat-trick spell as his much-awaited ‘Kudumbasthan’ is all set for the worldwide theatrical release on January 24, 2025. The film’s director shares his notes on creating this project.
Director Rajeshwar Kalisamy says, “The concept of Kudumbasthan was intriguing to me personally from the outset. Later, Prasanna Balachandran and I began working on the screenwriting and dialogues, which we found enjoyable. The events depicted in Kudumbasthan will resonate with contemporary audiences. Family life is a blissful experience that comes with responsibility. This story revolves around our protagonist’s encounters after marriage, narrated with humor and entertainment. Manikandan has quickly become a beloved figure as the boy-next-door, captivating audiences with his authentic and compelling performances in films.. Significantly, such an image has helped this character achieve 100% perfection. The entire team has delivered an outstanding contribution towards the project, and my heartiest thanks to producer Vinoth Kumar, for encouraging and materializing this film. Kudumbasthan will be a laughter feast and enjoyable stress buster.”
Kudumbasthan is produced by S. Vinoth Kumar of Cinemakaaran and features musical score by Vaisagh. While Manikandan and Saanve Megghana are playing the lead roles, Guru Somasundaram is essaying a pivotal character in this movie alongside, R.Sundarrajan, Prasanna Balachandran, and Jenson Dhivakar.
“’குடும்பஸ்தன்’ திரைப்படம் உங்களை சிரிக்க வைத்து, மனஅழுத்தத்தைக் குறைக்கும்” இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி!
’குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் மணிகண்டனின் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘குடும்பஸ்தன்’ உள்ளது. இந்தப் படம் ஜனவரி 24, 2025 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் பற்றி இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பகிர்ந்து கொண்டார்.
“’குடும்பஸ்தன்’ என்னுடைய சொந்த அனுபத்தில் இருந்து உருவான கதை. பின்னர், நானும் பிரசன்னா பாலச்சந்திரனும் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதத் தொடங்கினோம். கதையாக எழுதும்போதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்வையாளர்கள் தங்களுடன் நிச்சயம் பொருத்திப் பார்ப்பார்கள். குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புடன் கூடிய ஆனந்தமான அனுபவம். இந்தக் கதையில் நம் கதாநாயகன் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குடன் காட்டியிருக்கிறோம். நம் பக்கத்து வீட்டுப் பையன் போலவே இருக்கும் மணிகண்டன் படத்தில் தனது தேர்ந்த நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்வார். தனது நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளார். இந்த படத்தை ஊக்குவித்த தயாரிப்பாளர் வினோத் குமாருக்கு எனது மனமார்ந்த நன்றி. ’குடும்பஸ்தன்’ சிரிப்பு விருந்தாக மகிழ்ச்சியான அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்” என்றார்.
’குடும்பஸ்தன்’ படத்தில் மணிகண்டன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வைசாக் இசையமைத்திருக்க, சுஜித் என் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.