Friday, November 15, 2024
Home Uncategorized இரவின் நிழல் திரைப்பட விமர்சனம்

இரவின் நிழல் திரைப்பட விமர்சனம்

கால் நூற்றாண்டுக்கு முன்பு தனக்கான புதிய பாதையை அமைத்தவர், இன்று தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் உலக சினிமாவுக்கே புதிய பாதை அமைத்துள்ளார்.

சிங்கிள் ஷாட் திரைப்படம் என்பது இதுவரை யாரும் செய்யாத முயற்சி இல்லை என்றாலும், பார்திபன் செய்திருப்பது உலகின் முதல் முயற்சி. மிக நீளமான ஒரே ஷாட் என்ற வகையில் இதுவரை சிங்கிள் ஷாட் படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் பார்திபன் கையில் எடுத்திருக்கும் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் உண்மையிலேயே புதிய முயற்சி.

தான் செய்யப்போகும் முக்கியமான விசயங்களுக்கு முன்பாக, தன் வாழ்வில் நடந்த சில விசயங்களை அசைபோடும் நபரின் கதைதான் இரவின் நிழல். நந்து என்ற மைய பாத்திரத்தில் நடித்துள்ளார் பார்திபன். பவி டீச்சராக நடித்து ரசிகர்களிடம் புகழ்பெற்ற பிரகிடா, சினேகா குமாரி, சாய் பிரியங்கா என மூன்று நாயகிகள். இதில் பிரகிடாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை அறிந்து நடித்து பாராட்டுக்களை அள்ளிக்கொள்கிறார் பிரகிடா. சந்துரு, ஜோஸ்வா, பிரவீன் குமார் என பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலட்சுமி, ரோபோ சங்கர் போன்ற சீனியர் நடிகர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.

இவ்வளவு காதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சிங்கிள் ஷாட் படம் அதுவும் நான் லீனியர் எடுத்திருப்பது உலகசாதனை. நிச்சயமாக பல விருதுகள் பார்த்திபன் அவர்களுக்கு காத்திருக்கிறது. செட்,செட், செட்டுக்குள் செட் என, பட்த்தின் எடையை தாங்குவதற்காக பார்திபனுக்கு தன் தோள்களை கொடுத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன். பட்த்தின் இரண்டாவது ஹீரோ ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் என்று சொல்லுமளவுக்கு அவர் கேமிராவில் விளையாடி இருக்கிறார். ரஹ்மானின் பாடல்காள் மதிமயக்குமளவுக்கு நம்மை கட்டிப்போடுகின்றன.

பார்திபன் என்ற கலைஞனும் அவரின் குழுவும் ஓயாது உழைத்து இரவின் நிழலை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். கொண்டாட வேண்டியது நம் கடமை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments