Friday, November 8, 2024
Home Uncategorized 4 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் அக்ரமுல்லா பெய்க் (Akramullah Baig)...

4 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் அக்ரமுல்லா பெய்க் (Akramullah Baig) சாம்பியன் பட்டம் வென்றார்

4 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 7 ஆம் தேதியன்று, சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ‘லெட்ஸ் பவுல்’ (LetsBowl) மையத்தில் நடைபெற்றது. இதில், அக்ரமுல்லா பெய்க் (Akramullah Baig) தன்னை எதிர்த்து போட்டியிட்ட கணேஷ்.என்.டி அவர்களை 70 (447-377) பின்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கணேஷ் அக்ரமுல்லாவை முதல் போட்டிக்குப் பிறகு 9 பின்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நிலையில், 2 வது போட்டியில் அக்ரமுல்லா 79 பின்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இறுதியில் 70 பின்கள் வித்தியாசத்தில் கணேஷை அக்ரமுல்லா வீழ்த்தினார்.

முன்னதாக நடைபெற்ற முதல் அறையிறுதி போட்டி இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடப்பட்டது. இதில், முதல் நிலை வீரரான அக்ரமுல்லா பெய்க், 2 வது நாக் அவுட்டில் நான்காம் நிலை வீரரான பார்த்திபன்.ஜே அவர்களை 380-356 என்ற பின்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

24 பின்களின் பின்ஃபால் வித்தியாசத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில், மூன்றாம் நிலை வீரரான கணேஷ்.என்.டி, இரண்டாம் நிலை வீரரான ஷபீர் தன்கோட்.ஜே அவர்களை (419-374) 45 பின்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முதல் 4 பந்து வீச்சாளர்கள் 18 போட்டிகளில் அடித்த ஒட்டுமொத்த பின்ஃபால் பாய்ண்ட்ஸ் அடிப்படையில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறினர்.

அக்ரமுல்லா பெய்க் 3 வது சுற்றுக்குப் பிறகு 3722 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்ததோடு, 206.78 சராசரி பெற்றார். அவரைத் தொடர்ந்து ஷபீர் தன்கோட் 3713 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்து 206.28 சராசரி பெற்றார்.

சிறப்பு பரிசுகள்:

6 போட்டிகளில் அதிகபட்ச சராசரியாக 231.83 புள்ளிகள் பெற்ற தீபக் கோத்தாரி மற்றும் 18 போட்டிகளில் அதிகபட்ச சராசரியாக 207.78 புள்ளிகள் பெற்ற அக்ரமுல்லா பெய்க் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தொடர்புக்கு:

ராகினி முரளிதரன்
தலைவர்
தமிழ்நாடு டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ்
TNTBA

4th Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament
LetsBowl, Thoraipakkam, Chennai

Akram defeats Ganesh to clinch title

Akramullah Baig defeated Ganesh NT (447-377), in the finals of the 4th Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament which concluded at LetsBowl, Thoraipakkam, Chennai today 7th November 2024.

In the finals played based on cumulative pinfall of two games, Ganesh was leading Akram by a margin of 9 pins after the first game. In Game 2, Akram crushed Ganesh by a huge margin 79 pins and eventually defeated Ganesh by a pinfall difference of 70 pins (447-377).

Earlier in the day, in the first Semi-Final played based on the cumulative pinfall of two games, top seed Akramullah Baig defeated fourth seed Parthiban J (380-356) in the two-game knockout by a pinfall difference of 24 pins. In the second Semi-Final, third seed Ganesh NT convincingly won over second seed Shabbir Dhankot J (419-374) by 45 pins to ensure his spot in the Finals.

The top 4 bowlers made it to the knock-out round based on the cumulative pinfall scored in 18 games. Akramullah Baig finished on top of the table after Round 3 with a pinfall 3722 at an impressive average of 206.78 followed by Shabbir Dhankot (Pinfall – 3713, Average – 206.28).

Special Prizes:
Highest Average in 6 Game Block: Deepak Kothari (231.83)
Highest Average in 18 Games: Akramullah Baig (207.78)

Thanking You

Best Regards
Ragini Muralidharan
President
TNTBA

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments