Sunday, November 24, 2024
Home Uncategorized கறுப்பு பெட்டி படத்தில்கதை நாயகனாக நடிக்கும் கே.சி. பிரபாத்

கறுப்பு பெட்டி படத்தில்கதை நாயகனாக நடிக்கும் கே.சி. பிரபாத்

ஜேகே பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பி. மிதுன் சக்ரவர்த்திதயாரித்துள்ள படம் ‘கருப்பு பெட்டி’. பரபரப்பான அரசியல்வாதியாக வலம் வரும் கே.சி.பிரபாத் கதை நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாகதேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார். இந்த ஆண்டு சிறுபட்ஜெட், பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வெளியான படங்களில் கதையம்சம் உள்ள படங்களே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள கறுப்பு பெட்டிபடத்தை இயக்கியுள்ளஎஸ்.தாஸ்
படம் பற்றிகூறுகிறபோது குடும்பஸ்தனான நாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சினை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதுதான் படம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம்.

மனரீதியான பிரச்சினை ஒன்றை இதில் பேசியிருக்கிறோம். விமானத்துக்கும், அதன் இயக்கத்தையும் பதிவு செய்கிற கருவி கறுப்பு பெட்டி. அதே போன்று இந்தக் கதையிலும் கருப்பு பெட்டி போன்ற முக்கியமான ஒன்றுதான் கதையில் ட்விஸ்ட்டாக இருக்கிறது. அதனால் இந்தத் தலைப்பை வைத்துள்ளோம். 2 மணி நேர படம்தான். படம் பார்க்க வரும் பார்வையாளர் மனம் விட்டு இரண்டு மணி நேரம் சிரித்து வீட்டு போகலாம். ஏனென்றால் படம் திரையில் ஓடும் நேரமும் இரண்டு மணி நேரம்தான் என்றார். கதையின் நாயகனாக நடித்திருக்கும் கே.சி. பிரபாத்

‘பில்லா பாண்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் அப்படத்தை தயாரித்ததோடு, படத்தின் திருப்புமுனையான வில்லன் வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர், தொடர்ந்து ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘அங்காரகன்’ யாமம் ஆகிய படங்களில் நடித்து வருபவர். படவெளியீட்டையொட்டி கறுப்பு பெட்டி பட விளம்பர வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விளம்பர சுவரொட்டிகளில்

கே.சி.பிரபாத் மற்றும் கதாநாயகி இருவரும் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருக்கும் இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும், என்கிறார் கதை நாயகன் கே.சி. பிரபாத். இப்படத்தில் சரவண சக்தி, சித்தா ஆர்.தர்ஷன், தேவிகா வேணு, அனிதா, கீர்த்தி, நிஷா, சர்மிளா, கண்ணன், ராஜதுரை, சிற்றரசு, காமராஜ், சாய் வைரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

கே.சி.பி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை எழுதி எஸ்.தாஸ் இயக்கியிருக்கிறார். அருண் இசையமைக்க, சிற்றரசு பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்.மோசச் டேனியல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலசிவா படத்தொகுப்பு செய்துள்ளார். திவாகர் கலை இயக்குநராக பணியாற்ற ரவி ராஜா சண்டைக்காட்சிகளையும், மாஸ்டர் சக்ரவர்த்தி நடனக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.

வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கருப்பு பெட்டி’ படத்தை தென்னிந்தியா முழுவதும் கே.சி.பி. புரொடக்க்ஷன்ஸ் வெளியிடுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments