Charming Star Sharwa is treading a distinctive path by selecting a diverse range of scripts that showcase his versatility. The actor has signed his ambitious and challenging project #Sharwa38 that will be directed by Blockbuster Maker Sampath Nandi who is known for making commercial entertainers in his trademark style. KK Radhamohan will be producing the movie prestigiously on a high budget with rich production and technical standards on Sri Sathya Sai Arts as Production No. 15, with Lakshmi Radhamohan presenting it.
It’s a pulsating period action drama set in the rural backdrop of North Telangana, on Telangana-Maharashtra border, in the late 1960s, which was rarely explored on Indian celluloid. The story unfolds in a world ruled by fear where blood becomes the answer to many problems.
Sharwa38 will be a raw and intense narrative with gripping action and emotionally charged sequences. It will be a hatke and first-of-its-kind film from Sampath Nandi and Sharwa with a story and elements never told and discussed before on the silver screen.
Given the subject’s universal appeal, they are making it at Pan India level, which is a first for both Sharwa and Sampath Nandi.
The director who has been working on the story for some time will be presenting Sharwa in a never-before-seen character, and the actor will be undergoing a remarkable makeover to play the character from the 60s. The announcement poster shows fire erupting in a waste land.
Sharwa38 will boast exceptional technical standards with some top-tier technicians on board. Soundar Rajan S who is selective will crank the camera, while the sensational composer Bheems Ceciroleo will provide the music. Kiran Kumar Manne is the art director.
The ensemble cast and other prominent technicians to work on this most awaited movie will be revealed soon. #Sharwa38 will be released in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages.
Cast: Charming Star Sharwa
Technical Crew:
Writer, Director: Sampath Nandi
Producer: KK Radhamohan
Banner: Sri Sathya Sai Arts
Presents: Lakshmi Radhamohan
DOP: Soundar Rajan S
Music: Bheems Ceciroleo
Art Director: Kiran Kumar Manne
PRO: Yuvraaj
சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!
சார்மிங் ஸ்டார் ஷர்வா, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான களங்களில், அசத்தலான படங்களைத் தந்து வருகிறார். தற்போது பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ளார். அற்புதமான பொழுதுபோக்கு கமர்ஷியல் படங்களை தருவதில், பெயர் பெற்ற பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி ராதாமோகன் வழங்க, கே.கே.ராதாமோகன் ஸ்ரீ சத்யசாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், தங்களது 15 படைப்பாக, இப்படத்தை, மிக அதிக பொருட்செலவில் மற்றும் அற்புதமான தொழில்நுட்பத் தரத்துடன் இப்படத்தை தயாரிக்கிறார்.
1960களின் பிற்பகுதியில், தெலுங்கானா-மகாராஷ்டிரா எல்லையில், வடக்கு தெலுங்கானாவின் கிராமப்புற பின்னணியில், இரத்தமே தீர்வாக இருக்கும் களத்தில், நடைபெற்ற சம்பவத்தை, அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. இது இந்திய திரைத்துறையில் இது வரையிலும் பதிவாகாத வரலாறாக இருக்கும்.
Sharwa38 உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன், இரத்தமும் சதையுமாக தெறிக்கும், ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும். சம்பத் நந்தி மற்றும் ஷர்வாவின் கூட்டணியில், இதுவரையிலான திரைத்துறை வரலாற்றில், இல்லாத புதுமையான படைப்பாக, இந்திய திரையுலகம் கண்டுகொள்ளாத ஒரு வரலாற்றின் கதையைச் சொல்லும் படமாக இருக்கும்.
உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான கதை என்பதால், பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்குகிறார்கள், இது ஷர்வா மற்றும் சம்பத் நந்தி இருவருக்கும் முதல் முறையாகும்.
சில காலமாக இக்கதையை வெகு கவனத்துடன் உருவாக்கி வரும் இயக்குநர், ஷர்வாவை இதுவரை கண்டிராத புதுமையான கேரக்டரில் இப்படத்தில் காட்டவுள்ளார். ஷர்வா 60 களில் இருந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒரு பாலை நிலத்தில் தீ வெடிப்பதைக் காட்டுகிறது.
Sharwa38 சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன், உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் இப்படம் உருவாகிறது. சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். கிரண் குமார் மன்னே கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் பிற முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். #Sharwa38 திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
நடிகர்கள்: சார்மிங் ஸ்டார் ஷர்வா
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : சம்பத் நந்தி
தயாரிப்பாளர்: கே.கே.ராதாமோகன்
தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் வழங்குபவர் : லட்சுமி ராதாமோகன்
ஒளிப்பதிவு : சௌந்தர் ராஜன் எஸ்
இசை: பீம்ஸ் சிசிரோலியோ
கலை இயக்குனர்: கிரண் குமார் மன்னே
மக்கள் தொடர்பு : யுவராஜ்