Vikram saw its grand OTT release on Disney+ Hotstar in five languages Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi, on July 8th, 2022
Chennai, July 12, 2022: One of the biggest blockbuster hits at the Indian box office, Kamal Hasan’s Vikram smashed records with its premiere on Disney+ Hotstar, registering the highest opening weekend across all languages (Tamil, Hindi, Telugu, Kannada & Malayalam) on the platform. The film is expected to continue its blockbuster run on the platform as fans are celebrating this arrival with excitement and fervor. Kamal Haasan starrer Vikram, written and directed by Lokesh Kanagaraj, had its theatrical release in Tamil, Telugu, and Hindi whereas Disney+ Hotstar premiered the movie with additional language options including Malayalam and Kannada, generating tremendous response from the regional audiences.
Apart from Kamal Haasan’s macho looks, brilliant storytelling and mind-blowing fight sequences, fans were enthralled to see versatile actors like Vijay Sethupathi, Fahadh Faasil and Suriya sharing the screen with the legend.
“The love and affection showered by fans across the country for Vikram is heart-warming. Vikram was created with the sheer vision of entertaining audiences across the country and Disney+ Hotstar has helped reach it further right into the homes and hands of the viewers. It is a moment of celebration that it is continuing to break records, now registering the biggest opening weekend for Disney+ Hotstar nationally. My congratulations to the entire Team Vikram” says actor and producer, Kamal Haasan.
Gaurav Banerjee, Head – Content, Disney+ Hotstar & HSM Entertainment Network, Disney Star, said, “We are overwhelmed by the phenomenal response to Vikram on Disney+ Hotstar, after its roaring success at the box office across the globe. Viewers have applauded the film’s cult classic essence which has made them tune in to watch the movie in record numbers, making it the biggest launch on the platform nationally. This is a testimony to the true power a star like Kamal Haasan holds over the audience’s heart. We are happy to carry forward Vikram’s chronicles digitally to an even larger audience.”
About Disney+ Hotstar:
Disney+ Hotstar (erstwhile Hotstar) is India’s leading streaming platform that has changed the way Indians watch their entertainment – from their favorite TV shows and movies to sporting extravaganzas. With the widest range of content in India, Disney+ Hotstar offers more than 100,000 hours of TV Shows and Movies in 8 languages and coverage of every major global sporting event.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’
விக்ரம் திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8, 2022 அன்று பிரத்யேகமாக வெளியானது.
சென்னை, ஜூலை 12: 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படமாக, இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பிளாக்பஸ்டர் “விக்ரம்” திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி பிரீமியர் மூலம் பல சாதனைகளை முறியடித்து, பம்பர் ஓப்பனிங்கை பதிவுசெய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் மிகப்பெரிய சாதனைகளை முறியடித்ததாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான “விக்ரம்” தனது பிளாக்பஸ்டர் ஓட்டத்தை ஓடிடியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரசிகர்கள் இந்த ஓடிடி ரிலீஸை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்கள். மெகா ஆக்ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த சிறந்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க அவர்களுக்கு அருமையான வாய்ப்பு இது.
கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற கூடுதல் மொழிகளிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் திரையிடப்பட்டுள்ளது. இது அந்தந்த மொழி பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம் மற்றும் மனதைக் கவரும் சண்டை காட்சிகளுடன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா போன்ற பன்முக நடிகர்களின் நடிப்பு, என ஜாம்பவான்கள் ஒன்றாக திரையைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டு, ரசிகர்கள் பரவசமடைந்தனர். கூடுதலாக, அற்புதமான கதைசொல்லல் மற்றும் ஆக்சன் காட்சிகள் ஒவ்வொரு பிரேமிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “விக்ரம்” திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வெகு ஆர்வமாக உள்ளனர். சிறந்த ஆடியோ-விஷுவல் தரம், திரையில் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைப் பார்க்கும் சிறந்த காட்சி அனுபவத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்குகிறது.
நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் கூறுகையில்..
விக்ரம் மீது நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பொழியும் அன்பும் பாசமும் இதயத்தை தொடுகிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் தான் விக்ரம் உருவாக்கப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதை ஒவ்வொரு பார்வையாளர்களின் வீடுகளிலும் கைகளிலும் கொண்டு சேர்த்துள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு தேசிய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று இதுவரையிலான, சாதனைகளை இப்படம் முறியடித்து வருவது, கொண்டாட்ட தருணமாகும். ஒட்டுமொத்த விக்ரம் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.
டிஸ்னி ஸ்டார், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் & HSM என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்கின் கண்டெண்ட் ஹெட் கௌரவ் பானர்ஜி கூறுகையில்..,
உலகெங்கிலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை வெற்றிக்குப் பிறகு, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் விக்ரம் படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்வையாளர்கள் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தனித்தனியே கொண்டாடி, பாராட்டி வருகின்றனர். இப்படம் தேசிய அளவில் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வெளியீடாக அமைந்தது. கமல்ஹாசன் போன்ற ஒரு நட்சத்திரம் மீது பார்வையாளர்கள் இதயத்தில் வைத்திருக்கும் உண்மையான அன்புக்கு இதுவே சாட்சி. விக்ரம் படத்தினை இன்னும் அதிகமான பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும். இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் முறையை மாற்றியுள்ளது. ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு வரை, இந்தியாவில் அதிக அளவிலான பொழுதுபோக்குடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் இது வழங்குகிறது.