Sunday, November 17, 2024
Home Uncategorized குறைந்த கல்விக் கட்டணத்தில் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நிறைவேற்றும் 'டாக்டர்ஸ் டெஸ்டினேஷன் அகாடமி'

குறைந்த கல்விக் கட்டணத்தில் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நிறைவேற்றும் ‘டாக்டர்ஸ் டெஸ்டினேஷன் அகாடமி’

மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவருக்குமே அந்த வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. பணம், மதிப்பெண்கள், நீட் தேர்வு என அவர்களின் லட்சியத்துக்கு தடையாக பல காரணங்கள் குறுக்கே நிற்கின்றன.

பல வருடங்களாகவே மாணவர்களின் கல்விப்பணியில் சேவை நோக்குடன் செயல்பட்டு வரும் டாக்டர்ஸ் டெஸ்டினேஷன் அகாடமி (Doctor’s Destination Academy) இந்த தடைகளை எல்லாம் மீறி அவர்களது டாக்டர் கனவை குறைந்த கல்விக்கட்டணம், தரமான மருத்துவ படிப்பு என்கிற நோக்கில் பூர்த்தி செய்யும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

சென்ட்ரல் அமெரிக்காவில் உள்ள ஹெல்த் அண்ட் சயின்ஸ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் (Washinton University Of Health and Science) குளோபல் பார்ட்னராக இணைந்து, இங்கிருக்கும் மாணவர்களை அங்கே அனுப்பி படிக்க வைத்து அவர்களது மருத்துவ கனவை பூர்த்தி செய்து அவர்களை எதிர்கால மருத்துவர்களாக உருவாக்குவதுதான் டாக்டர்ஸ் டெஸ்டினேஷன் அகாடமியின் குறிக்கோள்.

அந்த வகையில் 2023-24க்கான சுமார் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்கள் அனைவரும் விரைவில் தங்களது மருத்துவ படிப்புக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்.

இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் அறிமுக மற்றும் வரவேற்பு விழா வரும் செப்-2ஆம் தேதி சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.

இப்படி தேர்வு செய்யப்பட்டு அமெரிக்கா செல்ல இருக்கும் மாணவர்களை அங்குள்ள கல்லூரியின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இருவருமே இங்கே சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் டாக்டர் டெஸ்டினேஷன் அகாடமியின் CEO பகவதி அம்மாள் மற்றும் இந்நிறுவனத்தின் பிரதிநிதிகளான செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

சென்ட்ரல் அமெரிக்காவில் உள்ள இந்த கல்லூரியில் ஏற்கனவே கிட்டத்தட்ட 200 இந்திய மாணவர்கள் படித்து தற்போது மருத்துவர்களாக தங்களது கனவை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். இவர்களுக்கான பட்டமளிப்பு விழா வரும் செப்டம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments