Friday, November 15, 2024
Home Uncategorized ”I can assure that Veetla Vishesham will be bringing back family audiences...

”I can assure that Veetla Vishesham will be bringing back family audiences to theaters after a long time” – Actor Sathyaraj

Actor Sathyaraj, one of the most-celebrated versatile actors in the Indian film industry is pretty excited about the release of his upcoming movie ‘Veetla Vishesham’ on June 17, 2022.

Actor Sathyaraj says, “Even before this remake could happen, I had already watched the movie Badai Ho and was impressed with the content, and the way, they presented it. However, when RJ Balaji approached me for the remake, my mind was blurred on whether I could pull it off efficiently. This is because, audiences have seen me in soft, rough, and tough roles, but not in such a character. It is when Balaji hinted to me to explore the ‘Paavam Moonji’ Sathyaraj (The innocent shade). He even referred to some of my hilarious scenes with Goundamani sir, where my character would behave like an innocent child. At the same, he wanted me to maintain the dignity of my character in En Bommakutty Ammavukku. When a director has such perfect clarity, it becomes an easy task for the actors. Significantly, this helped me a lot in performing this role. Moreover, Urvashi madam is such an outstanding artiste, and her performance is going to be lauded heavily in the theaters.”

When asked about the changes made in adapting to the tastes of Tamil audiences, he says, “I don’t think there’s a vast difference in cultural and relationship values across India. The family system is completely the same, and I didn’t feel any huge difference in portraying it. Yes, of course, RJ Balaji and his team have added certain factors that will make the audiences feel its best than the original version, which already, the producers have been appreciating. I can assure that Veetla Vishesham will be bringing back family audiences to theaters after a long time.”
Veetla Vishesham is produced by Zee Studios & Bayview Projects Boney Kapoor in association with Romeo Pictures Raahul. The film is directed by RJ Balaji-NJ Saravanan. RJ Balaji, Sathyaraj, Urvashi, Aparna Balamurali, VMC Lalitha, and many others are a part of this star cast.

Veetla Vishesham is all set for the worldwide theatrical release on June 17, 2022.

வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாகா பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும். – நடிகர் சத்யராஜ்

இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பன்முக திறமை வாய்ந்த
நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் நடிப்பில், ஜூன் 17, 2022 அன்று வரவிருக்கும் திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ வெளியீட்டில் அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

படம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது..,
இந்த ரீமேக் உருவாகும் முன்பே, பதாய் ஹோ திரைப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன், அதன் உள்ளடக்கம் மற்றும் அவர்கள் அதை வழங்கிய விதம் ஆகியவற்றால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஆனால், ரீமேக்குக்காக RJ பாலாஜி என்னை அணுகியபோது, அந்த கதாபாத்திரத்தை முழுமையாக என்னால் வெளிப்படுத்த முடியுமா என்று என் மனம் சற்று தயக்கம் கொண்டது. ஏனென்றால், பார்வையாளர்கள் என்னை மென்மையான, முரட்டுத்தனமான மற்றும் கடினமான பாத்திரங்களில் பார்த்திருக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் அத்தகைய கதாபாத்திரத்தில் இல்லை. ‘பாவம் மூஞ்சி’ சத்யராஜை (அப்பாவி ) கொண்டு வர வேண்டும் என்று பாலாஜி என்னிடம் சொன்னார். கவுண்டமணி சாருடன் நான் நடித்த சில வேடிக்கையான காட்சிகளை அவர் குறிப்பிட்டார், அதில் எனது கதாபாத்திரம் ஒரு அப்பாவி குழந்தையாக நடந்து கொள்ளும். அதேசமயம், என் பொம்முகுட்டி அம்மாவுக்கு படத்தில் வரும் என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பை கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரு இயக்குனருக்கு இவ்வளவு சரியான தெளிவு இருந்தால், அது நடிகர்களுக்கு எளிதான காரியமாகிவிடும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த பாத்திரத்தில் நடிக்க இது எனக்கு மிகவும் உதவியது. மேலும், ஊர்வசி மேடம் ஒரு சிறந்த கலைஞர், மேலும் அவரது நடிப்பு திரையரங்குகளில் பெரிய பாராட்டுகளை பெறும்.

தமிழ் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, ​​“இந்தியா முழுவதும் கலாச்சார மற்றும் உறவுமுறை மதிப்புகளில் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. குடும்ப அமைப்பு முற்றிலும் ஒரே மாதிரியானது, அதை சித்தரிப்பதில் பெரிய வித்தியாசத்தை நான் உணரவில்லை. ஆம், நிச்சயமாக, RJ பாலாஜி மற்றும் அவரது குழுவினர் சில அம்சங்களை சேர்த்துள்ளனர், இது ஒரிஜினல் பதிப்பை விட பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என தயாரிப்பாளர்களால் பாராட்டப்பட்டுள்ளது. வீட்ல விசேஷம் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமாகா பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று என்னால் உறுதியாக கூறமுடியும்.”

வீட்ல விசேஷம் படத்தை RJ பாலாஜி-NJ சரவணன் இயக்கியுள்ளனர், Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர், Romeo Pictures இணைந்து தயாரித்துள்ளனர். இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக்கான இப்படத்தில் RJ .பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, VMC லலிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வீட்ல விசேஷம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments