Friday, November 15, 2024
Home Uncategorized ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படமான ‘ஜவான்’ வெளியீட்டிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே சர்வதேச அளவில் அட்வான்ஸ் புக்கிங்கிற்காக திறக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் பகிர்ந்து கொண்டதாவது…
” அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனியில் ஜவான் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் பல நாடுகளில் விரைவில் முன்பதிவு தொடங்கவுள்ளன.

ஜவானுக்கான சர்வதேச திரையரங்க உரிமையாளர்களால் தொடங்கப்பட்டிருக்கும் முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான இந்த தனித்துவம் மிக்க நடவடிக்கை, ஷாருக் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதானின் அற்புதமான வெற்றிக்குப் பின் உருவாக்கப்பட்டது. மேலும் ஷாருக் கானின் திரைப்படம் இந்த பிராந்தியங்களில் வரலாற்று ரீதியாக பெறும் பெரும் எண்ணிக்கையின் பிரதிபலிப்பாகும். பொதுவாக அவர்கள் இதுபோன்ற முன்பதிவை தொடங்குவதில்லை.
மற்ற திரைப்படங்களுக்கு ஆரம்பத்தில் இருந்த போதிலும், உலக அளவிலான திரையரங்க உரிமையாளர்களின் ஆர்வம் மற்றும் தேவையின் காரணமாக இது முன்னரே கண்காணிக்கப்பட்டு தொடங்கப்பட்டிருக்கிறது. முன்பதிவுகள் வேறு பிராந்தியங்களில் தொடர்ந்து வெளியாகி வருவதால், ‘ஜவான் ஒரு பெரிய திரைப்படம்’ என்பது மட்டும் தெளிவாகிறது.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முன்பதிவு எண்ணிக்கையில் இத்தகைய அதிகரிப்பு ஊக்கமளிப்பதாக உள்ளது. ஏனெனில் இது திரைப்படத்துறை மற்றும் திரையரங்குகளில் முன்னேற்றத்தை வளர்த்தெடுப்பதில் முக்கிய திரைப்படங்கள் வகிக்கும் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது.

இந்த நாடுகளில் உள்ள ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜவான்’ திரைப்படத்திற்கான கொண்டாட்ட நிகழ்விற்காக தங்களின் இருக்கைகளை முன்பதிவு செய்ய விரைந்தனர். அதிலும் குறிப்பாக சர்வதேச அளவில் ஏராளமான திரையரங்குகளைக் கொண்ட குழுமமான வோக்ஸ், ஏ எம் சி சினிமா, சினிமார்க் போன்ற திரையரங்குகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது முன்பதிவுனை முன்கூட்டியே திறப்பதன் மூலம் ஷாருக்கானின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments