Saturday, November 16, 2024
Home Uncategorized தமிழகத்தில் உடற்பயிற்சி கூட துறைக்காக இன்று சென்னையில் புதிதாக துவங்கியது

தமிழகத்தில் உடற்பயிற்சி கூட துறைக்காக இன்று சென்னையில் புதிதாக துவங்கியது

தமிழகத்தில் உடற்பயிற்சி கூட துறைக்காக இன்று சென்னையில் புதிதாக துவங்கியது தமிழ்நாடு ஃபிட்னெஸ் அசோசியேசன் என்ற அமைப்பு.

சென்னை வளசரவாக்கத்தில் இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உடற்பயிற்சி கூடங்களின் உரிமையாளர்களையும் அதன் பணியாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பெரும் முயற்சியாக புதிதாக உருவாகி இருக்கிறது தமிழ்நாடு ஃபிட்னெஸ் அசோசியேசன் என்ற அமைப்பு. தமிழகத்தில் ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் இருக்கும் நிலையில் பல நூறு உடற்பயிற்சி கூடங்கள் அழிந்து தொழில்துறையும் முடங்கி வரும் சூழல் இன்று நிலவி வருகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சராக திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இருக்கும் இந்த சூழலில் உடற்பயிற்சி கூட துறையில் இது போன்ற ஒரு அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தமான விஷயமும் கூட.. இதனால் அனைத்து உடற்பயிற்சி கூட உரிமையாளர்களையும் உடற்பயிற்சி கூட நிபுணர்களையும் ஒன்றிணைத்து தமிழக மக்களின் வாழ்வியலில் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கிட.. அனைவரது வாழ்விலும் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திடவும் உடற்பயிற்சி கூட தொழில்துறையை பாதுகாத்திடவும் இன்று புதிதாக உருவாகி இருக்கிறது தமிழ்நாடு ஃபிட்னெஸ் அசோசியேசன் என்ற அமைப்பு.

அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்து கலந்து கொண்ட உடற்பயிற்சி கூட உரிமையாளர்களால் இதன் தலைவராக திரு வி ராஜா அவர்களையும் செயலாளராக திரு இ பிரசன்ன குமார் அவர்களையும் பொருளாளராக திரு பா சரவணக்குமார் அவர்களையும் அனைத்து உடற்பயிற்சி கூட உரிமையாளர்களும் ஒன்று இணைந்து இன்று தேர்வு செய்து உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் திருத்தமான கோரிக்கைகளை முன்வைத்தும் உடற்பயிற்சி கூட துறையை பாதுகாக்க வலியுறுத்தியும் அடுத்தடுத்த கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றி அவற்றை முழுமைப்படுத்தவும் இன்று உறுதி செய்து உள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments