சிறந்த சமுதாய தொண்டாற்றும் கல்லூரி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விருது வழங்கும் பூமி அறக்கட்டளை
2006 இல் தொடங்கப்பட்ட இந்த பூமி அறக்கட்டளை கல்வி மற்றும் சமுதாய களபணி என்று கல்வி சம்பந்தமாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம்
இதுவரை நிறுவனத்தால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
இதில் வருடத்திற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் (volunteer’s)தன்னார்வ தொண்டு ஊழியராக கலந்துகொண்டு தொண்டாற்றி வருகிறார்கள்.
இந்த Bhumi campus awards நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள மாணவர்களுக்கு சமுதாயத்தின் மீது அக்கறை வேண்டும் அப்படியான அக்கறை காட்டும் மாணவர்களை களம் கண்டு அவர்களுக்கு படுத்தவே இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதேபோல் மாணவர்களுக்கு இப்படியான வழிகாட்டுதலை நடத்தும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் கல்லூரிக்கும் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
இந்த விருதுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விலங்குகள் பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு என பல்வேறு சமுதாய நோக்கத்தோடு செயல்படும் கல்லூரி சேர்ந்த மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் வழங்க பட்டது
இப்படியான மாணவர்களையும் கல்லூரியும் ஊக்குவிப்பதால் இதேபோன்று சமுதாயப் பணியை நாம் செய்ய வேண்டும் என்று மற்ற கல்லூரிகளுக்கு மாணவனுக்கும் உந்துதலாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது
இதில் 220க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அப்ளிகேஷன் சமர்ப்பித்தனர். இதில் சுற்றுச்சூழல் , சமுதாய அக்கறை கொண்ட ஆசிரியர்கள் , சமுதாய அக்கறை மாணவனுக்கு ஊக்குவிக்கும் கல்லூரி, கழிவு மேலாண்மை , மிகவும் தனித்துவமான சமுதாய முயற்சி, வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி என்று ஏழு வகை 30 கல்லூரிகளை தேர்ந்தெடுத்தோம்
இதில் சிறப்பு விருந்தினராக Dr.சுல்தான் அகமது இஸ்மாயில் சுற்றுச்சூழல் ஆர்வலர்,
சங்கர் விஸ்வநாதன் CIO TVS Sundharam
ஹரி பாலச்சந்திரன் CEO ITC academy ஆகியோர் கலந்து கொண்டனர்
மந்திரி மெய்யநாதன் காணொளி மூலம் இவ்விழாவை வாழ்த்திப் பேசினார்
அனைவருக்கு விருதுகளை வழங்கி நன்றியுரை தெரிவித்தார் பூமி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதேவி மோகிலி நீடி.