தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என் ராமசாமி முரளி ராமநாராயணன் அவர்கள் வெளியீட்டுள்ள அறிக்கை. அதில், தமிழ் திரையுலகில் தனது நிறுவனத்திற்காக மக்கள் போற்றும் வகையில் தரமான படங்களை தயாரித்து வெளியிட்ட திரு.எஸ்.ஏ. ராஜ்கண்ணு அவர்கள் காலமானார் என்ற செய்தி திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரு.எஸ்.ஏ. ராஜ்கண்ணு அவர்கள் தமிழ் திரையுலகின் அடையாளமாக நம்மிடையே வாழும் திரு. பாரதி ராஜா அவர்களை 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தியவர். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் நடிகர் திரு.சுதாகர் நடிகை திருமதி. ராதிகா அவர்களையும் அறிமுகப்படுத்தியவர். கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் திரு. கே. பாக்யராஜ் அவர்களை வில்லனாக வேறு ஒரு அவதாரத்தில் நடிக்க வைத்தவர் திரு.பி.வி.பாலகுரு அவர்களை இயக்குனராக அறிமுகப்படுத்தியவர். இந்த திரைப்படத்தில் தான் திருமதி.வடிவுக்கரசியை கதாநாயகியாக அறிமுகபடுத்தியவர் மேலும், உலகநாயகன் திரு.கமலஹாசன் அவர்களுக்ளு திருப்புமுனையாக அமைந்த மகாநதி திரைப்படத்தினை தயாரித்தவரும் இவர்தான். வாலிபமே வா, பொண்ணு புடிச்சிருக்கு எங்க சின்ன ராசா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்து தனது நிறுவனத்திற்கு தனிமுத்திரை பதித்து சென்றுள்ள திரு.எஸ்.ஏ. ராஜ்கண்ணு அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என் ராமசாமி முரளி ராமநாராயணன் அவர்கள் வெளியீட்டுள்ள அறிக்கை.
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on