Monday, April 7, 2025
Home Uncategorized வாடகை வீட்டுக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு - 18 லட்சத்தில் அசத்தலான வீடு ரெடி!

வாடகை வீட்டுக்கு குட்பை சொல்ல நேரம் வந்தாச்சு – 18 லட்சத்தில் அசத்தலான வீடு ரெடி!

18 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு! – சொந்த வீடு வாங்கும் கனவை நினைவாக்கும் ’ஒன் ஸ்கொயர்’

பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் சொந்த வீடு என்பதை சிலர் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஆனால், இந்த நிலை இனி இல்லை என்பது தான் உண்மை.

ஆம், வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கான மிகப்பெரிய வாய்ப்பை பிரபல கட்டுமான நிருவனமான ரூஃப்வெஸ்ட் (Roofvest) உருவாக்கி கொடுத்திருக்கிறது.

கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குறியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, இந்நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் விரைவில் விற்பனையாகி விடுகிறது.

இப்படி பிரமாண்டமான மற்றும் ஆடம்பரமான வீடுகளை கட்டி வந்த ரூஃப்வெஸ்ட் நிறுவனம், நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் விதத்தில் சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில் குறைந்த விலையில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பை உருவாக்கியுள்ளது.

முடிச்சூர் பகுதியை சுற்றி ‘ஒன் ஸ்கொயர்’ (One Square) என்ற பெயரில் 5 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் முதலில் 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை அறிமுகம் செய்துள்ளது.

இதில் உள்ள அனைத்து வீடுகளும் ஒரு படுக்கையறை (1BHK) கொண்டவையாகும். இதன் விலை ரூ.18 லட்சம் மட்டுமே. அனைத்து வசதிகளுடன், சுற்றுச்சுவர் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பின் விலை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தாலும், அது தான் உண்மை.

மேலும், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பல்வேறு பரிசுகளும் காத்திருக்கிறது. 50 கிராம் தங்க நாணயம், கார், இருசக்கர வாகனம், ஸ்மார்ட் டிவி, வெளிநாட்டு சுற்றுலா, பரிசுத்தொகை என்று ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ திரு.ஷாம், சுமார் 40-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை அறிமுக நாளிலேயே விற்பனை செய்து சாதித்துள்ளார். அவருடைய இந்த சாதனைக்கு ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் மீதும், அந்நிறுவனம் உருவாக்கிய தரமான வீடுகள் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு உதராரணமாகும்.

ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.ஸ்ரீதர் நாராயணன், கட்டுமானத்துறையில் உள்ள அனைத்துவிதமான வடிவங்களிலும் சாதிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறார். அந்த வகையில், வில்லா, கடற்கரை வில்லாக்கள், ஆடம்பரமான சொகுசு பங்களாக்கள், மலைப்பிரதேச தங்கும் விடுதிகள், ரிசார்ட் உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டுமான பணிகளையும் வெற்றிகரமாக செய்திருக்கிறார்.

தற்போது, நடுத்தர மக்களுக்காக குறைந்த விலையில், அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் திரு.ஸ்ரீதர் நாராயணன், எளிய மக்களின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் விதமாக ‘ஒன் ஸ்கொயர்’ திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பகமான நிறுவனத்தின் குறைந்த விலையில் ஆன இந்த ‘ஒன் ஸ்கொயர்’ அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத் துறையில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

‘ஒன் ஸ்கொயர்’ அடுக்குமாடி குடியியிருப்பு பற்றிய மேலும் விபரங்களுக்கு:

கைப்பேசி : 8880309999

இணையதளம் : onesquarehomes.com

முகவரி : W39C+JXJ, புவனேஷ்வரி நகர், முடிச்சூர், தமிழ் நாடு 600063

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments