தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, மலாய், பெங்காலி, போஜ்புரி, ஆகிய மொழிகளில் 126 படங்களை இயக்கியவர். மாபெரும் நடிகர்களை வைத்து படங்களை இயக்காதவர். ஆடு, மாடு, பாம்பு, குரங்கு ஆகியவைகளை நம்பி படம் எடுத்து பாராட்டு பெற்றவர். பக்தி படங்கள் மட்டுமல்ல, சமூக சிந்தனையுள்ள படங்களையும் தந்தவர்., கலைஞர்.மு.கருணாநிதி வசனத்தில் நிறைய படங்களை இயக்கியவர். தனது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் 100 படங்களை தயாரித்தவர்.
சிரித்த முகம்.
சிறந்த ஆளுமை.
சிறப்பான நிர்வாகம்.
தொழிலாளர்களும் படம் தயாரிக்க உதவியவர்.
சட்டமன்ற உறுப்பினராக
செயலாற்றி மக்கள் மனதை கவர்ந்தவர்.
தமிழ் திரைப்பட தலைவராக மூன்று முறை வென்றவர். அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் பேசி சென்னை அருகே பையனூரில் தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட பத்தரை ஏக்கர் நிலம் கிடைக்க செய்தவர்.
தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் தலைவராக திறம்பட செயலாற்றி கலைஞர் அவர்களின் மனதை கவர்ந்தவர்.
அவரது நினைவை போற்றுவோம்.