நடிகை சித்தாரா, நடிகர் நிர்மல் ,பிரில்லா போஸ் , உமா சுஹாசினி மற்றும் பலர் இந்நெடுந்தொடரில் பயணித்துள்ளனர். இத்தொடரின் கதைக்கரு பல திருப்பங்களும் கருத்துகளையும் கொண்டது ..
வெங்கடேஷின் மூத்த மகன் பாலாஜி மற்றும் மருமகள் சந்தியா, பாலாஜியின் முதல் தம்பி விவேக்கிற்கு மாதவி என்ற நடுத்தர வர்க்கப் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். இரண்டாவது தம்பி அருண், சந்தியாவின் தங்கையான விஜியை திருமணம் செய்து கொள்வதாக ஏற்கனவே பேசப்பட்டது.
இதற்கிடையில் காயத்ரி -விவேக்கின் முதலாளியின் மகள், அவர் விவேக்கை காதலித்தும் இதுவரை தனது காதலை வெளிப்படுத்தவில்லை,அவள் விவேக் மீதான தனது காதலை அவள் தந்தை சக்ரபானியிடம் எடுத்துரைக்கிறாள்.மறுநாள் காயத்ரியுடன் சக்ரபானி வெங்கடேஷின் குடும்பத்தாரிடம் வந்து விஷயத்தை கூறி, விவேக் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்கிறார்.
மறுநாள் சந்தியாவும் பாலாஜியும் மாதவியின் வீட்டிற்கு சென்று. சந்தியா மாதவியின் வீட்டில் விஷயத்தைச் சொல்லி,விவேக் காயத்ரிக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவைத் தெரிவிக்கிறாள்,மாதவியை அருணுடன் திருமணம் செய்து வைக்கலாம் என்று அவர்களிடம் எடுத்துரைக்கிறாள் . மாதவி அருணுடன் திருமணம் செய்து கொண்டால், அந்த குடும்பத்தில் சந்தியாவுக்கு எப்போதும் கை மேலோங்கி இருப்பதால் அந்த வீட்டில் அவள் அடிமையாக மட்டுமே நடத்தப்படுவாள். இதைக் கேட்ட மாதவி சந்தியா மீது வெறுப்பையும் பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறாள்,
காயத்திரி, மாதவி, விஜி, சந்தியா ஆகிய நான்கு பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளன. சந்தியா இப்போது என்ன செய்யப் போகிறாள்?
அவள் எப்படி தன் குடும்பத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பப் போகிறாள்?
இப்போது யார் யாரை திருமணம் செய்வது? பொறுத்திருந்து காண்போம் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு உங்கள் ஜெயா தொலைக்காட்சியில் .