Friday, November 15, 2024
Home Uncategorized மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன் திரை விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன் திரை விமர்சனம்

த்ரில்லர் படங்கள் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர்
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளர். இப்படத்துக்கு மணிகாந்த் இசையமைத்துள்ளார்.

ஆதறவற்றோர் விடுதியில் வளர்ந்த ஐந்து நண்பர்கள், மிக நெருங்கிய நட்புடன் இருந்து வருகின்றனர். அதில் ஒருவர் மகத், அவர் எதேச்சையாக ஒரு அசம்பாவிதத்தை பார்த்துவிட, அதன் காரணமாக கொல்லப்படுகிறார். மகத்தின் கொலைக்கு காரணமான போலீஸ் மற்றும் ரவுடியை கொல்ல திட்டமிடும் நான்கு நண்பர்களில் ஒருவரான வரலட்சுமி ஒரு காவல்துறை அதிகாரி.

வரலட்சுமியின் திட்டத்தை செயல்படுத்த நண்பர்கள் முயற்சி செய்யும்போது, அவர்கள் திட்டத்தை வேறு யாரோ ஒருவர் செயல்படுத்திவிடுகிறார்.

அது யார்? வரலட்சுமி மற்றும் அவர்கள் நண்பர்கள்மேல் கொலைப்பழி விழுந்ததா என்பதை அதிரடி த்ரில்லராக கொடுத்திருக்கிறார் இயகுனர்.

அடுத்தடுத்து வரும் ட்விஸ்டுகள், எதிர்பாராத திருப்பங்கள் என நம்மை சீட் நுனிக்கு வரவைக்கிறது படம், மிகச்சிறந்த திரைக்கதை, வசனங்கள் என பிரமாதப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன். காவல்துறை அதிகாரியாக அமர்க்களப்படுத்தி இருக்கிறார் வரலட்சுமி, வரலட்சுமியின் நண்பர்களாக வரும் சந்தோஷ், மகத் என அனைவரும் தங்கள் பாத்திரங்களின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரியாக வரும் ஆரவ் ஆர்ப்பாட்டமில்லாமல் கண்களாலேயே மிரட்டி இருக்கிறார், தாதா கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குனர் சுப்ரமணிய சிவா கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

படத்தின் தன்மைக்கேற்ற அதிரடி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளார் மணிகாந்த், அதே நேரம் மென்மையான, இதயத்தை வருடும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார். எடிட்டிங், கேமிரா என அனைத்து டெக்னிக்கல் விசயங்களும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன

மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன்: எதிர்பாராத திருப்பங்கள்

Cast: Varalaxmi Sarathkumar, Arav, Santhosh prathap, Mahat Raghavendra, Yasar, Vivek Rajagopal, Amit Bharghav, Subramanya Siva,Yash Shetty,Ravi Venkatraman, Shruthi Nayak, Joe Simon, Balaji, Chandra chud

Written & Directed by: Dayal Padmanabhan

Producer: Dayal Padmanabhan for D PICTURES

DoP: Shekhar Chandra

Editor: Preethi- Babu

Production Design: C S Balachander

Stund choreography: Chetan Dsouza

Screenplay Consultant: AV Anand
D. Tharagan

Sub titles: D Tharagan

Co directer: MM Muthu

Lyrics: Dayal Padmanabhan

Music & Background score: Manikanth Kadri

Costume consultant: Meera Chitrappaavai

Costumes: Chakravarthy

Make up: Nirmala Alphose

Colourist: Ramesh

DI & VFX : Unify media, Bangalore

Sound mix & Dedign: Udayakumar

Production executive:
Mysore Raju
Kumar

Executive producer: Vinodhkumar . P

Stills: Click Seenu

Publicity design: N Talkies

PRO: Suresh Chandra & Rekha Done

Cast: Varalaxmi Sarathkumar, Arav, Santhosh prathap, Mahat Raghavendra, Yasar, Vivek Rajagopal, Amit Bharghav, Subramanya Siva,Yash Shetty,Ravi Venkatraman, Shruthi Nayak, Joe Simon, Balaji, Chandra chud

Varalaxmi: Archana

Arav: Neduchezian

Santhosh:Bala

Subramanya siva: Naga

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments