ஜெயா தொலைக்காட்சியில் நம் பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்குக் உணர்த்தும் விதமாக அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நோய்களுக்கான தீர்வுகளை நடைமுறையில் விளக்கி காண்பிக்கும் விதமாக “பாரம்பரிய வைத்தியம்” எனும் பகுதி ஒளிபரப்பாகிறது.
இப்பகுதியை பிரபல சித்த மருத்துவர் ராஜமாணிக்கம் தொகுத்து வழங்குகிறார். அன்றைய தினம் அவர் தயாரிக்கப் போகும் மருந்தைப் பற்றியும், அந்த மருந்தின் நன்மையையும் விரிவாக எடுத்துரைப்பார். நம்மைச் சுற்றி ஏராளமாகக் கிடைக்கும் இயற்கைப் பொருட்களின் மருத்துவப் பண்புகளையும் விளக்குகிறார்.
வரும் வாரங்களில் வயோதிகர்களுக்கு ஏற்படும் முட்டு வலி,காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல்,அடிபட்ட வீக்கம் மற்றும் மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு எளிய மருத்துவ தீர்வுகளை ஒளிபரப்பாக இருக்கிறது.
“பாரம்பரிய வைத்தியம்” திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 7:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் காலை மலர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பாகிறது.