Friday, November 15, 2024
Home Uncategorized இசைஞானி இளையராஜாவை சந்தித்த, "மியூசிக் ஸ்கூல்" திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண்...

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!

இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர்.

யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023 அன்று வெளியாகிறது.

இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தையும், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கல்விச் சாதனைகள் மட்டுமே முக்கியமில்லை, கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளும் என்பதை வலியுறுத்தும் இத்திரைப்படம், பொழுதுபோக்கு முறையில் இசைஞானியின் இசைக்கோர்ப்பில், 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது. அவற்றில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.

படம் வெளியாவதையொட்டி, படக்குழு தீவிரமாக முன்வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று இயக்குநர் இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். அவருடன் உரையாடி, புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இசைப் பள்ளியின் மற்ற நடிகர்கள் பெஞ்சமின் கிலானி, சுஹாசினி முலே, மோனா அம்பேகன்கர், லீலா சாம்சன், பக்ஸ் பார்கவா, வினய் வர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், வக்கார் ஷேக், ஃபானி ஆகியோருடன் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி பிலிம்ஸ் வழங்கும் இந்தப் பன்மொழி திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. பிவிஆர் இந்தி, தமிழ்ப் பதிப்புகளையும், தில் ராஜு தெலுங்கு பதிப்பையும் வெளியிடுகிறார்கள் .

இப்படம் உலகமெங்கும் 12 மே 2023 அன்று வெளியாகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments