Friday, November 15, 2024
Home Uncategorized நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தினை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் நடிகர் கார்த்தியின் ரசிகை.

பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தின் முதல் நாள் ஷோவுக்கு தான் இம்மாதிரி ஆச்சர்யங்கள் நடக்கும். ஆனால் தற்போது நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) வை நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) கூறும்பொழுது..
நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியவில் தங்கியிருந்தேன், அப்பொதிலிருந்து, நான் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகை. பொன்னியின் செல்வன் முதல் பாகம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதில் கார்த்தி நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஜப்பானில் வெளியாக காலமாகும் என்பதால் உடனே பார்த்தாக வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி வந்தோம். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை பார்த்து மிகவும் என்ஜாய் செய்தேன். மிக அட்டகாசமான படம் என்றார்.

நடிகர் கார்த்தியை சந்தித்தது குறித்து கேட்டபோது ..

மிக சந்தோசமான அனுபவம், #ஜப்பான் பட பிடிப்பில் மிக பிஸியான நேரத்தில் என்னை சந்திக்க ஒப்புக்கொண்டு என்னை வீட்டுக்கு அழைத்தார். அவர் மனைவி கேசரி பரிமாறினார். மிக எளிமையாக என்னிடம் பழகினார். அவருடன் பல விசயங்கள் உரையாடினேன். RRR படம் போல் இந்தப்படத்தையும் ஜப்பானில் பிரமாண்டமாக வெளியிடுமாறு கேட்டேன். ஜப்பானில் தமிழ்ப்படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது படக்குழுவை ஜப்பான் அழைத்து வரக் கோரிக்கை வைத்திருக்கிறேன். கார்த்தியின் அடுத்த படம் #ஜப்பான் என்ற போது ஆச்சர்யப்பட்டேன். ஆனால் அது ஜப்பான் பற்றிய படமல்ல ஜப்பான் எனும் பெயர் மட்டுமே என்ற போது கொஞ்சம் வருத்தம் தான். ஜப்பான் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். ஜப்பானை வைத்து தமிழ் படங்கள் வர வேண்டும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments