எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான பழங்காலத்துக்கதை போத்தனூர் தபால் நிலையம். அறிமுக இயக்குனர் பிரவீன் இப்ப்டத்தின் நாயகனாகவும் நடிட்துள்ளார். அஞ்சலி ராவ் நாயகியாகவும், முக்கிய பாத்திரத்தில் வெட்கட் சுந்தரும் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளார்.
ஹாலிவுட் படம் தொடங்கி கோலிவுட் வரை வங்கிக்கொள்ளைகளை மட்டுமே பார்த்து வளர்ந்த நமக்கெல்லாம், இப்படத்தில் காட்டப்படும் கொள்ளை முயற்சி நிச்சயம் இன்ப அதிர்ச்சி. கோவையில் இருக்கும் போத்தனூர் என்ற பகுதிதான் கதைக்களம். 90களின் தொடக்கத்தில் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. அந்த கால கட்டத்தில் வெளிவந்த நாவல்களில் கம்ப்யூட்டர் துறை குறித்த ஆருடங்கள் இருந்து கொண்டே இருக்கும் அதை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் பிரவீன். ஒரு கொள்ளையும், அந்த கொள்ளையால் நாயகனின் தந்தை எப்படி பாதிக்கப்படுகிறார், அந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர் தேர்வு, நாயகனாக நடித்திருக்கும் பிரவீனுக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியாத அளவுக்கு இயல்பாக நடித்துள்ளார். அதே நேரம் ஒரு இயக்குனராக அனைவரிடமும் சிறப்பான நடிப்பை வாங்கியும் உள்ளார். நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ் மிகவும் க்யூட்டாக இருக்கிறார், அசால்ட்டாக நடித்துள்ளார். போஸ்ட் மாஸ்டர் காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ், காசாளராக நடித்திருக்கும் சீதாராமன், நாயகனின் அம்மா பாத்திரத்தில் நடித்திருப்பவர் என அனைத்து நடிகர்களும் மிக மிக இயல்பாக நடித்துள்ளனர்.
90களில் நடக்கும் கதைக்களத்துகான மிகச்சிறந்த கலை இயக்கம், இசை என டெக்னிக்கல் விசயங்களை மிகச்சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள் படக்குழுவினர். இது போன்ற பரபரப்பான த்ரில்லர் மற்றும் பீரியட் படங்களுக்கு சற்றே ப்ளாக் ஹுயூமர் வகை நகைச்சுவையை பகுதியை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நிச்சயமாக படம் பார்ப்பவர்களுகு ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும்.
போத்தனூர் தபால் நிலையம் சிறந்த பொழுதுபோக்கு நிலையம்